அதிரடியாக ரன்களை குவித்து வரும் ஆஸ்திரேலிய அணி, இன்றைய நாளில் முன்னேற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
ஐபிஎல் 2023 க்கான இறுதிப் போட்டி நிறைவடைந்த நிலையில் இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விளையாடி வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி தற்போது அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகி
ஐபிஎல் 2023 க்கான இறுதிப் போட்டி நிறைவடைந்த நிலையில் இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விளையாடி வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி தற்போது அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை சமளிக்க முடியாமல் ரன்களை வாரி வழங்கி வருகிறது. இதே நிலை நீடித்து வந்தால் இந்திய அணிக்கு சவாலாக மாறிவிடும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா யாரும் எதிர் பாரத நிலையில் பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவடைந்த நிலையில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 327 ரன்களை குவித்து பிரமாண்ட நிலையில் முதல் நாள் போட்டியை முடித்துள்ளது ஆஸ்திரேலியா அணி. உஸ்மான் கஹவாஜா 0 ரன்களில் அவுட்டாகி வெளியேற இந்திய அணியீன் கை ஓங்கி இருந்தது,
வார்னர் 43 ரன்னிலும், மார்னஸ் லாபுசாக்னே 26 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். முதல் நாள் முடிவில் அஸ்திரேலிய அணியின் அதிக பட்ச ரன்னாக ட்ராவிஸ் ஹெட் 156 பந்துகளிலே 146 ரன்களை குவித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களை குவித்து அவுட்டகாமல் விளையாடி வருகின்றனர். இதே நிலை நீடித்து வந்தால் இந்திய அணிக்கு அது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். இந்திய அணி கட்டாயம் விக்கெட் வீழ்த்தி மீண்டும் போட்டியில் முன்னேற வேண்டும்.
இல்லையென்றால் ஆஸ்திரேலிய அணி இதே போல் தொடர்ந்து இன்றும் அதிரடியாக விளையாடி வந்தால் இன்றைய நாள் முடிவில் 500 ரன்களுக்கு மேல் குவிக்க ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்புள்ளது. இதே போல் விளையாடி வந்தால் இந்திய அணிக்கு அது மிகவும் மோசமான போட்டியாக மாற வாய்ப்புள்ளது. இன்றைய இரண்டாம் நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை கட்டாயம் தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய அணி சார்பில் சிராஜ், ஷமி, தாகூர் தல ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இன்று நடக்கவிருக்கும் இரண்டாம் நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 400 ரன்களுக்குள் சுருட்டிவிட்டால் மட்டுமே இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பாக தான் இருக்கும். அதே போல் இன்றைய நாளிலே இந்திய அணி போட்டியை தொடங்கி ரன்களை குவிக்க வேண்டும்.