9 வருடங்களாக சொந்த மண்ணில் மண்ணை கவ்வும் பெங்களூரு அணி. தங்களது சாதனையை தக்க வைத்துக் கொண்ட கொல்கத்தா அணி.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ம

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இதற்கு முன்பு கடந்த 9 ஆண்டுகளாக கொல்கத்தா அணியும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி சின்னசாமி மைதானத்தில் மோதிய போது எல்லாப் போட்டுகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்றுள்ளது.

இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியில் கொல்கத்தா அணியின் கைகளே எப்போதும் ஓங்கி இருகின்றது. அதே தான் இன்றும் மீண்டும் நடந்துள்ளது. இந்த போட்டியானது ஆரம்பம் முதலில் விறுவிறுப்பாக செல்லும் ஏனென்றால் கொல்கத்தா அணிக்கும் பெங்களூரு அணிக்கும் கடும் போட்டி இருக்கும் என பல ரசிகர்கள் போட்டிக்கு முன்பாக இணையத்தில் பரப்பி வந்தனர். ஆனால் இன்று போட்டி முற்றிலும் மாறாகவே மாறியது. இந்த போட்டியில் பாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தார்.

அது கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் நன்றாக அமைந்தாலும் போட்டி போக போக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் விராட் கோலிக்கு ரன்களை வாரி வழங்கி வந்தனர். பெங்களூர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை அடித்தது. அதில் அதிகபட்சமாக கிங் கோலி 59 பந்துகளில் 83 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதில் நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்சர்களையும் அவர் அடித்து இருந்தார். அதற்கு அடுத்தபடியாக கேமரூன் கிரீன் 21 பந்துகள் 33 ரண்களும் மேக்ஸ்வேல் 19 பந்துகளில் 28 ரன்கள் அடித்து இருந்தார்கள்.

கேப்டன் மற்றும் மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்து வெளியேறினார்கள். பெங்களூரு அணி வீரர்களால் விராட் கோலிக்கு பிறகு ரன்களை குவிக்க முடியவில்லை. அதன் பின்பு பேட்டிங் செய்ய 183 ரன்களை இலக்காக கொண்டுகளமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சால்ட் மற்றும் நரைன் தொடக்கத்தில் இருந்து பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை நான்கு பக்கமும் சிதறடித்திருந்தனர். 6 ஓவர்கள் முடிவிலே அவர்கள் விக்கெட்டை இழக்காமல் 85 ரன்களை அடித்து இருந்தார்கள்.

இறுதியாக கொல்கத்தா அணி 18.3 ஓவர்களிலே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சின்னசாமி மைதானத்தில் அவர்களது சாதனையை தக்கவைத்து கொண்டனர். அதாவது கடந்த 10 வருடங்களில் பெங்களூரு அணியை சின்ன சாமி மைதனத்தில் வீழ்த்தியுள்ளனர். இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் சுனில் நரைன் 47 ரன்களும் அடித்து இருந்தனர். கொல்கத்தா அணியின் சிறப்பான பேட்டிங்கால் வெற்றி பெற்றது. இதில் பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணம் மோசமான பௌலிங் மற்றும் மோசமான பீல்டிங்கும் தான் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை