ரசிகர்களின் இதய துடிப்பை அதிகரித்த பஞ்சாப் – கடைசி ஓவரில் மண்ணை கவ்விய சென்னை. என்ன காரணம்?
இந்தியன் பிரீமியர் லீக்கில் 41 வது ஆட்டத்தில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.சென்னை அணி புள்ளி பட்டியலில
இந்தியன் பிரீமியர் லீக்கில் 41 வது ஆட்டத்தில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.சென்னை அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திலும் பஞ்சாப் அணி 6 இடத்திலும் இருந்து வருகிறது. இவ்விரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவியது.
சென்னை அணியின் தொடக்க அட்ட காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே ஆரம்பம் முதலே அதிரடியை தொடங்கினார்.தொடர்ந்து அதிரடியாகவே விளையாடி வந்த ருதுராஜ் மற்றும் கான்வே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்து வந்தனர். இருவரும் இனைந்து 5.3 ஓவர்களில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிபை பூர்த்தி செய்தனர். அதன் பின் ருதுராஜ் தனது விக்கெட்டை இழந்து வெளியேற, அதற்க்கு பின் வந்த டுபே ஆரம்பம் முதலே அவருடைய பாணியில் அதிரடியை காட்டிவந்தார். மற்றொரு புறம் அதிரடியாக விளையாடி வந்த கான்வே 30 பந்துகளில் தன்னுடைய மற்றொரு அரை சத்தத்தை பூர்த்தி செய்தார். டுபே 17 பந்துகளில் 28 ரன்களை அடித்த நிலையில் ஷாருக்கானிடம் கேட்ச் குடுத்து வெளியேறினார்.
அதன் பின் களம் கண்ட மொயின் அலியுடன் இணைந்த கான்வே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை நான்கு பக்கங்களிலும் அடித்து சிதறடித்த மொயின் அலி ரன்களில் அவுட்டாகி வெளியேற, அதற்க்கு பின் வந்த ஜடேஜா அதிரடியை காட்டி வந்தார். அதன் பின் ஜடேஜா அவுட்டாகி வெளியேற அதிரங்கமே அதிர வைக்கும் வகையில் தோனி களமிறங்கி 2 சிக்சர்களை பறக்க விட்டார். 20 வது ஓவர்கள் முடிவில் 200 ரன்களை குவித்தது சென்னை அணி. கான்வே 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து வந்தார்.
201 என்ற இமாலய இலக்கை நோக்கி களம் கண்ட பஞ்சாப் அணியின் தொடக்க அட்டகாரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரனுக்கு ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டம் தேவை பட்டது. அவர்களும் அதற்கு ஏற்றார் போல் ஆட்டத்தை தொடங்கினார்கள், இருப்பினும் சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் ஷிகர் தவான் 28 ரன்களிலும், பிரப்சிம்ரன் 42 ரன்களிலும் அவுட்டாகி வெளியேற, அதன் பின் வந்த அதர்வா டைடு 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் சென்னை அணியின் பௌலிங்கை நான்கு பக்கங்களிலும் சிதறடித்து வந்த லிவிங்க்ஸ்டன் 24 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இந்நிலையில் பஞ்சாப் அணி வெற்றிக்கு அருகிலே சென்றது. சாம் கரண் 29 ரன்களில் வெளியேற, அதன் பின் ஜிதேஷ் ஷர்மா 21 வெளியேறினார். கடைசி வரை சென்ற போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.