கடைசி வரை போராடி தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அபாரமாக விளையாடிய லக்னோ அணி

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 34வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் பலப்

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 34வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது.லக்னோ அணி இதற்க்கு முன்னதாக ராஜஸ்தான் அணியிடம் ஒரு தோல்வியை தழுவி இருந்தது. மற்று ஒரு பக்கம் சென்னை அணி மும்பை அணியிடம் வெற்றி பெற்று இந்த போட்டியில் மோதின.

இதில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி வந்தது. ஆரம்பத்தில் லக்னோ அணியின் அதிகம் தான் அதிக அளவில் இருந்தது என்று சொல்லலாம். சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழித்து தடுமாற மற்று ஒரு பக்கம் ஜடேஜா நிதானமாக விளையாடி அவரது அசரி சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் களமிறங்கிய தல டோனி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரன்களை மடமடவென ரன்களை சேர்த்தார்.

அதன் படி சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து இருந்தது. போட்டியின் ஆரம்பத்தில் அதிரடி மன்னன் ரச்சின் ரவீந்திர ரன்களை ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு எமற்றதை அளித்தார். அதன் பின் அணியின் கேப்டன் ருதுராஜூம் 17 ரன்னிலே ஆட்டமிழந்து வெளியேறினார். மறு முனையில் விளையாடிய ரஹானே 36 ரன்களை அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்து இருந்தார்.துபே மூன்று ரன்னிலும் ரிஸ்வி ஒரு ரன்னிலும் வெளியேற மொயின் அலி அதிரடியாக விளையாடி 30 ரன்களை குவித்தனர்.

அதன் பின் தல தோனி களமிறங்கி ஜடேஜாவுடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்து வந்தனர். அதில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 57 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதில் ஐந்து பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். மற்று ஒரு பக்கம் ருத்ரதாண்டவம் விளையாடிய தோனி வெறும் 9 பந்துகளில் 28 ரன்களை அடித்து இருந்தார். அதில் அவர் மூன்று பவுண்டரிகளும் 2 சிக்சர்களையும் அவர் அடித்து இருந்தார். அதில் அவர் டி வில்லியர்ஸ் போல் ஒரு சிக்சரை பின் பக்கம் அடித்து இருப்பார். இது போன்ற சிக்சர்களை தோனி ஆரம்பகாலத்தில் ஆடியது போல விளையாடினார்.

அதன் பின் பேட்டிங் செய்த லக்னோ அணி சென்னை அணியின் பந்துவீச்சை எளிதாக அடித்து 19 ஓவர்களில் விக்கெட்டுகள் 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 82 ரன்களும் டி காக் 54 ரன்களையும் அடித்து இருந்தனர். இன்றைய போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு சற்று சுமாராகவே இருந்தது என்றும் சொல்லலாம். எனவே லக்னோ அணி எளிதாக வெற்றி பெற்றது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை