தொடர் தோல்விகளிலிருந்து வெற்றியை கண்ட டெல்லி அணி, சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் 2023 க்கான 28வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெயிட்லி மைதானதில் எதிர்கொண்டன. மழையின் குறிக்கீடு காரணமாக இப்போட்டி தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பௌலிங்கை தேர்வு
ஐபிஎல் 2023 க்கான 28வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெயிட்லி மைதானதில் எதிர்கொண்டன. மழையின் குறிக்கீடு காரணமாக இப்போட்டி தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பௌலிங்கை தேர்வு செய்தார். தொடர் தோல்வியில் இருந்து மீள இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் விளையாடி வந்தது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க அட்டகரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் ராய் ஒபெனிங் செய்ய வந்தனர். டெல்லி அணியின் பௌலிங்கை எதிர்கொள்ள கஷ்டப்பட்டு வந்த லிட்டன் தாஸ் 4 ரன்களிலே ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த வெங்கடேஷ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமலே அவுட்டாகி வெளியேறினார். ஆரம்பம் முதலே தடுமாற்றதிலே இருந்த கொல்கத்தா அணி வரிசையாக விக்கெட்டை இழந்து வண்ணமே இருந்தன. கொல்கத்தா அணியின் கேப்டன் 4 ரன்களிலே விக்கெட்டை இஷாந்த் சர்மாவிடம் இழந்து வெளியேறினார்.
ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை செலுத்திய டெல்லி அணி அடுத்தடுத்து கொல்கத்தா அணியின் வீரர்களை வெளியேற்றினர். மந்தீப் சிங் 12 ரன்களிலே வெளியேறி அணிக்கு மீண்டும் தடுமாற்றத்தையே தந்தனர். அதிரடி நாயகன் ரிங்கு மற்றும் சுனில் நரைன் சொற்ப ரன்களிலே வெளியேறினார்கள். கொல்கத்தா அணியின் வீரர்கள் வந்த வேகத்திலே சென்றனர். ஜாசன் ராய் 43ரன்களில் வெளியேற, கடைசியில் ரஸல் சில சிக்சர்களை பறக்க விட்டு அணிக்கு நம்பிக்கையை சேர்த்தார். ரஸல் 37 ரன்களை சேர்த்தார். iஇருப்பினும் 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது கொல்கத்தா அணி.
128 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் அணிக்கு அற்புதமான தொடக்கத்தையே கொடுத்தனர். ப்ரித்வி ஷா 13 ரன்களில் வருன்னிடம் விக்கெட்டை இழந்து வெளியேற மறுபக்கம் அணியின் கேப்டன் வார்னர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நன்றாக விளையாடி கொண்டு இருந்த டெல்லி அணிக்கு தொடர்ந்து மிட்சல் மார்ஷ் மற்றும் பிலிப் சால்ட் சொற்ப ரன்களிலே விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். அணிக்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் வார்னர் அரை சதத்தை பூர்த்தி செய்தார். 57 ரன்களில் வருனின் சுழல் பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
வார்னர் சென்ற பிறகு நிதானமாக விளையாடிய மனீஷ் பண்டே 21 ரன்களில் வெளியேற டெல்லி அணிக்கு பின்னடைவை சந்தித்து. அமான் கான் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற கையிலிருந்த போட்டியை கொஞ்சம் கொஞ்சமாக நழுவவிட்டது டெல்லி அணி. எளிதாக வெல்லக்ககூடிய போட்டியை டெல்லி அணி கடைசி வரை கொண்டு சென்று கஷ்டப்பட்டு வெற்றியை பதிவு செய்தது. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது.