சாம்பியன் அணிக்கு இந்த நிலைமையா? இன்றைய தோல்வியின் மூலம் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து அணி.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதில் ஒன்று 36 வது போட்டியை புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அண

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதில் ஒன்று 36 வது போட்டியை புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிகளும் மோதின. இங்கிலாந்து அணி இந்த தோல்வியின் மூலம் உலக எலிமினேட் ஆகி விட்டது. இங்கிலாந்து அணி விளையாடிய. ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றியை பெற்றுள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியா அணியும் ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. இன்றைய போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு இந்த நடப்பு சாம்பியன் தொடரில் எந்த முடிவும் சரியாக கை கொடுக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது.

ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக கிரீன் 47 ரன்களும் ஸ்மித் 44 ரன்களும் ஸ்டாய்னிஸ் 35 ரன்கள் குவித்து இருந்தார். நியூசிலாந்து அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். வோக்ஸ் நான்கு விக்கெட்களையும் ஆதில் ரஷித் மற்றும் மார்க்வூட் தலா இரண்டு விக்கெட்களையும் டேவிட் வில்லி மற்றும் லிவிங்க்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்து இங்கிலாந்து அணி சற்று நம்பிக்கை ஏற்படுத்தி கொடுத்தனர்.

ஆனால் அந்த நம்பிக்கை அவர்களுக்கு பலன் அளிக்கவில்லை. 287 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 64 ரன்களும் டேவிட் மலான் 50 ரன்களும் மொயின் அலி 52 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தனர். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வூட் தலா இரண்டு விக்கெட் களையும் ஸ்டாய்னிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை