“தோனி எங்கேயோ இருக்கிறார். ஜுரேலை விளையாட விடுங்கள்” – இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பேச்சு.
எம் எஸ் தோனியாக மாற தோனிக்கு 20 வருடங்கள் ஆனது. இந்த இளம் வீரரை சுதந்திரமாக விளையாட விடுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருந்தார். இந்திய இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதில் இந்திய அணி 3-1 என்ற க
எம் எஸ் தோனியாக மாற தோனிக்கு 20 வருடங்கள் ஆனது. இந்த இளம் வீரரை சுதந்திரமாக விளையாட விடுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருந்தார். இந்திய இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் காயம் காரணமாக அதன் பின் விலகினார்.
அதன் பின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எஸ். பரத் விளையாடினார். ஆனால் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதன் பின் மூன்றாம் மற்றும் நான்காம் போட்டிகளில் பரத்திற்கு பதிலாக ஜுரெல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது தனது சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 46 ரன்களும் 4வது போட்டி முதல் இன்னிங்சிலும் 90 ரன்களும் இரண்டாவது இன்னிங்க்ஸில் 39 ரன்களையும் அவர் அடித்து இருந்தார். அது மட்டும் அல்லாமல் அவர் விக்கெட் கீப்பிங்கும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.
இவரது பேட்டிங் மற்றும் கீப்பிங் பார்பதற்கு தோனியை போல் உள்ளது என்று பல முன்னாள் இந்திய வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பலரது கருத்து குறித்து கங்குலி கூறுகையில், எம்எஸ் தோனி வேறு லீக்கில் இருக்கிறார். ஜூரலுக்கு திறமை இருக்கிறது; அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எம்எஸ் தோனியாக 20 ஆண்டுகள் ஆனது. தோனி தோனியாக மாற 15 ஆண்டுகள் ஆனது. எனவே அவரை ஜூரல் விளையாட விடுங்கள். ஜூரலின் திறமை சுழல், வேகம் மற்றும் மிக முக்கியமாக அழுத்தத்தின் கீழ் செயல்பட வேண்டும்.
அதைத்தான் நீங்கள் ஒரு இளைஞரிடம் எதிர்பார்க்கிறீர்கள் என்று அவர் மேலும் கூறினார். போட்டிக்குப் பிறகு, தோனியின் ஒப்பீடுகள் குறித்து கேள்விக்கு ஜூரல் பணிவாக இருந்தார். சுனில் கவாஸ்கர் போன்ற ஒரு ஜாம்பவான் என்னைப் பற்றி பேசுவதைக் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மனநிலை நன்றாக இருந்தது, குறிப்பிட்ட அறிவுரைகள் எதுவும் இல்லை… வெளியே சென்று விளையாடுங்கள். பந்தைப் பார்த்து விளையாடுங்கள். அவ்வளவு நேரம் நான் விளையாடுவேன். அது சிறந்தது,” என்று ஜுரேல் கூறியிருந்தார்.