இவங்களோட ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு இடையூறு ஏற்படுத்தியது – பிராட் ஹக் பேச்சு

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியானது சில நாட்கள் முன்பு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் மற

By ·

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியானது சில நாட்கள் முன்பு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் மற்றும் சிறப்பான பந்த்துவீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இருந்தது.

அதில் இந்திய அணிக்கு முக்கிய தூணாக இருந்தது ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கும் ஒரு காரணம் தான் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும் அடித்து இருந்தார். அது மட்டுமல்லாமல் அதற்க்கு முக்கிய காரணமாக இருந்தது சர்ப்ராஸ் கானின் இரண்டு அரை சதமும் தான். சர்ப்ராஸ் கான்னுக்கு இது தான் இந்திய அணிக்கு அறிமுகப்போட்டி. அவர் பல காலமாக இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்று அவர் போராடி கொண்டு இருந்தார். அவருக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை அவர் வெளிப்படுத்தினார்.

இந்திய அணியின் இளம் ஜெய்ஸ்வால் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹக் கூறுகையில், அவர் சிறந்த இளம் வீரர் என்று நான் நினைக்கிறேன். அவர் இந்தத் தொடரில் அதிக வேகத்தில் அவர் விளையாடவில்லை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு அவர் வரும்போது அவரது அடுத்த டெஸ்ட் அங்குதான் இருக்கும். ஆரம்பத்திலேயே ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே விளையாடலாம். ஜூரல் பேட்டிங்கால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

பண்ட் முழு உடல் தகுதி பெற்று மூன்று வடிவங்களிலும் விளையாடுகிறாரா என்பதைப் பொறுத்து அவருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் இருக்கும். இந்திய அணி கிரிக்கெட்டின் பிராண்டாக விளையாடுகிறார்கள், மேலும் இந்தியாவின் இளைஞர்களுக்கு அத்தகைய திறமை இருக்கிறது என்பதை இங்கிலாந்து அணி அறிவார்கள். இளைஞரான ஜெய்ஸ்வாலால் இங்கிலாந்து அணிக்கு இடையூறு ஏற்பட்டது. சர்ஃபராஸுடன் அவர் விளையாடிய கிரிக்கெட் பிராண்ட், இங்கிலாந்துக்கு அழுத்தம் கொடுத்தது.

அவர்களின் பந்துவீச்சாளர்கள் மற்றும் அனுபவமின்மை இந்த நேரத்தில் கையாள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது, அங்குதான் இரு அணிகளுக்கும் இடையேயான வேறுபாடு உள்ளது. இருக்கிறது. என்றும் அவர் கூறி இருந்தார். மேலும் இங்கிலாந்து அணி மற்றும் இந்திய அணி மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நாளை நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை