ரசிகர்களிடம் கொடியை பிடுங்கி குப்பையில் போட முயன்ற காவலர். உடனடியாக நடவடிக்கை எடுத்த சென்னை மாநகர காவல் துறை ஆணையர்.
மைதானத்தில் இந்திய கொடியுடன் வந்த ஆப்கான் பாகிஸ்தான் ரசிகர்கள். வெளியே நின்று கொடிகளை பிடிங்கிய தமிழக போலிசார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 5 இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி
மைதானத்தில் இந்திய கொடியுடன் வந்த ஆப்கான் பாகிஸ்தான் ரசிகர்கள். வெளியே நின்று கொடிகளை பிடிங்கிய தமிழக போலிசார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 5 இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியும் 1௦ இடத்தில ஆப்கானிஸ்தான் அணியும் இன்று சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இவ்விரண்டு அணிகளும் கடந்த தோல்வியில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் அணி கடைசி இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை தழுவியது.
அதே போல் ஆப்கானிஸ்தான் அணி கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி உள்ளது. இந்த இரண்டு அணிகளும் செமி பைனலுக்கு செல்ல இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் சிக்கி இன்று போட்டியை விளையாடியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்வது அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது.
நீண்ட நாட்களாக தடுமாறி வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்த போட்டியில் அவருடைய சிறப்பான பேட்டிங்கின் மூலம் 50 ஓவர்களில் 282 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களும், ஷபீக் 58 ரன்களும், இப்திகார் அகமது 40 ரன்களும் குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நூர் 3 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும் நபி மற்றும் அஹமதுல்லா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட்டு அவமதித்த போலீஸ்காரர் 😡😠#IndianFlag #DMK_HatesIndianFlag pic.twitter.com/DpRMIaE8Jt
— Gokula Krishnan (@gokulabala) October 23, 2023
தற்போது ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் ஜெர்சி அணிந்த சில ரசிகர்கள் இந்தியாவின்கொடியை கையில் ஏந்தி மைதனதிர்க்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். ஆனால் இங்கு இருந்த போலிசார் ஒருவர் அவர்களிடம் இருந்து அந்த கொடிகளை பிடுங்கி வைத்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் பரவியதால் அந்த சம்பந்தபட்ட காவர் மீதுசென்னை மாநகர காவல் துறை ஆணையர் அவரை காவல் கட்டுபாட்டு அறைக்கு மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.