இந்திய அணி இரக்கமற்ற அணியாக தற்போது மாறி வருகிறது. தடுத்து நிறுத்துவது கடினமான விஷயம் – சோயப் அக்தர்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 33வது போட்டியில் இந்திய அணியும் ஸ்ரீலங்கா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் ஒ
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 33வது போட்டியில் இந்திய அணியும் ஸ்ரீலங்கா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் ஒரு தோல்வியை கூட தழுவாமல் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து வருகிறது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மெண்டிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆனால் அது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. முதல் பந்தில் ரோஹித் ஷர்மா போர் அவர்களின் சிறப்பான தொடக்கத்தை அளித்த நிலையில் அதற்க்கு பந்தில் அவர் ஆட்டம் இழந்து வெளியேற அதன் பின்பு நின்று நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த சுப்மான் கில் மற்றும் விராட் கோலி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து ரன்களை குவித்து வந்தனர்.
92 ரண்களை நெருங்கிய நிலையில் சுப்மான் கில் மதுசங்க வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் மென்டீஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்தப் போட்டியில் விராட் கோலி சதத்திற்கு நெருங்கி சச்சினின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.மற்றொரு பக்கம் நிதானமாக ஆடி ரண்களை குவித்து கொண்டிருந்த ஷ்ரேயஸ் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்கள் அடித்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்து வெளியேறினார். முகமது ஷமி 2 ரன்கள் ஆட்டம் இருந்து வெளியேற ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் குவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 357 ரன்களை குவித்தது இந்திய அணி.இலங்கை அணிக்கு 358என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
358 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மாபெரும் தோல்வியை தழுவியது. இலங்கை அணிக்கு அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களும் தீக்ஷனா 6 ரன்களும் ரஜித்தா ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சிராஜ் விக்கெட்டுகளும் ஷமி விக்கெட்டுகளும் பும்ரா விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணி இலங்கை அணியை எளிதாக 300 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் பாக்.அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறுகையில்,
இந்திய அணியின் இரக்கமற்ற அணியாக தற்போது மாறி வருகிறது. அவர்களை தடுத்து நிறுத்துவது தற்பொழுது மிகவும் கடினமான விஷயம். ஆனால் இப்பொழுது இந்திய அவர்கள் வேகப் பந்துவீச்சாளர்களை கொண்டாடும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் நேற்று போட்டியில் அவர்கள் ஒவ்வொரு பந்திலும் உற்சாகம் தெரிந்தது. சமிக்காக நான் தனிப்பட்ட விதத்தில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் 14 விக்கெட் கைப்பற்றி இருக்கின்றார். சிராஜ் தீ போன்று இருக்கிறார். இதில் முக்கியமான ஆயுத்தம் பும்ரா. இவர் தான் அந்த இருவரையும் சுதந்திரமாக பந்து வீச அனுமதி அளிக்கிறார். அவருடைய திறமையும் மிகவும் அபயங்கரமாக இருந்தது. இவர்கள் மூவரும் தொடர்ச்சியாக உடற்தகுதியோடு இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.