இந்திய அணி அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு தயராகி விட்டனர் – இந்திய அணி குறித்து பேசிய சல்மான் பட்.
போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. 19ஆம் தேதி அன்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக ஆஸ்திரேலி
போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. 19ஆம் தேதி அன்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார்.
இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும் விராட் கோலி 54 ரன்களுக்கும் ரோஹித் ஷர்மா 47 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வூட் தலா 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
241 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் அதன் பின் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி இந்திய அணியை எளிதாக இறுதிப் போட்டியில் வென்றனர். ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 241 ரன்களை குவித்து வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 137 ரன்களும் மார்னஸ் லாபுசாக்னே58 ரன்களும் மார்ஷ் 15 ரன்களையும் அடித்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 ஒரு விக்கெட்டையும் மட்டுமே வீழ்த்தி இருந்தன. எனவே ஆஸ்திரேலியா அணி 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது.
இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய ரசிகர்கள் சிலர் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனுக்கு அருவருக்க தக்க வகையில் செய்திகளை அனுப்பி இருந்தனர். இது குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறுகையில், சில ஆஸ்திரேலியா வீரர்களின் குடும்பத்தையும் அவர்களையும் சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் ஆபாசமாக பேசி வருகின்றனர். இது ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிபலிக்கின்றது என்பது கிடையாது.
இது வித்தியாசமாகவும் மோசமாகவும் சிந்திக்கும் சிலரின் கருத்துக்களின் பிரதிபலன்கள் மட்டுமே. இது நடக்கக்கூடாது என்பதில் மாற்று கருத்து கிடையாது. வெற்றி பெற்ற அணியை பாராட்ட வேண்டிய தவிர அது அந்த அணியை விமர்சித்து இந்திய ரசிகர்களுக்கு போன்ற செய்திருக்கக் கூடாது. மேலும் இந்தியா அடுத்த கிரிக்கெட் தொடருக்கு சென்று விட்டது. அவர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் தங்கள் பெஞ்ச் வலிமையை சோதிக்கின்றார்கள் உலக கோப்பைக்கு பிறகு அவர்கள் டி20 உலகக்கோப்பை வீரர்களை தயார் செய்து முயற்சி செய்து இருக்கிறார்கள் என்று தெளிவாக காண முடிகிறது என்றும் அவர் கூறியிருந்தார்