இந்திய அணி அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது. செய்தால் அது அவர்களுக்கே பின்னடைவாக மாறிவிடும் – மைக்கல் வாகன்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள உப்பிலி மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் இன்னிங்க்சில் இ

By ·

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள உப்பிலி மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் இன்னிங்க்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே இங்கிலாந்து அணி அடித்திருந்தது. அதில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 37 ரன்களும் டக்கட் 35 ரன்கள் அடித்து இருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 436 ரன்களை குவித்து இருந்தது. இதில் இந்திய அணி அதிகபட்சமாக ஜடேஜா 87 ரன்களும் கேஎல் ராகுல் 86 ரண்களும் ஜெய்ஸ்வால் 80 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்திருந்தனர். 190 ரன்களை முன்னிலையில் இந்திய அணி இன்னிங்க்சை நிறைவு செய்து இருந்தது. அதன் பின் இரண்டாவது இன்னிங்க்ஸில் தங்களது பேஸ்பால் ஆட்டத்தை இந்த போட்டியில் அவர்கள் நிரூபித்தனர். நாளில் அதாவது நேற்று அவர்கள் 420 ரன்கள் குவித்து விருந்தினர்.

எனவே இந்திய அணிக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயித்து இருந்தது இங்கிலாந்து அணி. தற்போது இந்திய அணி ரோஹித் ஷர்மா மற்றும் ஜெயஸ்வால்லின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து இருந்தாலும் அதன் பின் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. எனவே நாள் முடிவதற்கு உள்ளது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இன்றைய நாளில் சிறப்பாக செய்தனர். டாம் ஹார்ட்லி 7 லீச் மற்றும் ரூட் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.இதன் மூலம் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியின் ஆடுகளம் குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கல் வாகன் கூறுகையில், இந்தத் தொடரில் இந்திய அணி தான் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது. அவர்கள் இந்த தோல்விக்கு ஈடுகட்டும் வகையில் நடத்தப்பட்டு விளையாடுவார்கள். ஆனால் இந்தியா எப்படிப்பட்ட ஆடுகளுக்கு தயாரிக்க வேண்டும் என்று தங்களை மீண்டும் ஒரு கேள்வி கேட்டுக் கொள்ளும். இதைவிட திரும்பும் வகையில் ஸ்பின்னார்களுக்கு சாதகமாக ஆடுகளத்தை தயார் செய்தால் அது மோசமானதாகவே அமையும்.

நான் தொடருக்கு முன்பாகவே கூறியிருந்தேன். சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளை தயார் செய்வதை விட்டுவிட்டு இந்தியாவிற்கு பேட்டிங் செய்யும் வகையிலான தட்டையான ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என்று அதுதான் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் சுழல் பந்து வைத்து சாதகமாக ஆடுகளத்தை அமைத்தால் அவர்கள் விழுந்து விட மாட்டார்கள். என்றும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை