முழங்கால் முன்னர் இருந்ததை விடவும் பரவாயில்லை – ஆஷஸ் தொடரில் விளையாடுவது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வரும் ஆஷஸில் தனது பந்துவீச்சைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து நடத்துகிறது. இது ஜூன் 16 ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 ஆம் தேதி முடிவடைகிறது. பென் ஸ்டோக்ஸ் இந்த வருட ஐபிஎல்
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வரும் ஆஷஸில் தனது பந்துவீச்சைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து நடத்துகிறது. இது ஜூன் 16 ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 ஆம் தேதி முடிவடைகிறது. பென் ஸ்டோக்ஸ் இந்த வருட ஐபிஎல் 2023 சீசனில் விளையாட வந்த போதும், இங்கிலாந்து அணி நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் அவருக்கு காலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.
பென் ஸ்டோக்ஸ் இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்மே விளையாடியுள்ளார். ஆனாலும் அவர் ஆஷஸ் தொடரின் போது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். மேலும் லார்ட்ஸில் அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை பென் ஸ்டோக்ஸ் எதிர்கொள்ள இருக்கிறார்.
இது பற்றி அவர் கூறுகையில் “நியூசிலாந்து தொடரின் போது இருந்ததை விட தற்போது முழங்கால் நல்ல நிலையில் உள்ளது. கடந்த பத்து வாரங்களாக நான் இந்தியாவில் ஐபிஎல் போட்டிக்காக செலவிட்ட போது என்னால் முடிந்த அளவிற்கு உடல்தகுதியை மேம்படுத்த முயற்சி செய்தேன். இந்த கோடையில் விளையாட்டில் முழுப் பங்கு வகிக்கும் சந்தர்ப்பத்தை நான் எனக்கு கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.
சென்னையில் உள்ள மருத்துவக் குழுவுடன் நான் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்தேன். அவர்கள் ECB தோழர்களுடன் இணைந்து கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் இருந்தது போன்று என்னுடைய உடற்ப்பகுதியை மேன்படுத்த முயற்சி செய்தேன். கண்டிப்பாக என்ன என்னால் முடிந்த அளவுக்கு உழைத்தேன். ஆனால் மனதும் உடலும் வேறு. அப்படியிருந்தாலும் நான் சிறந்த வாய்ப்பை அளித்துள்ளேன் என்றார் இங்கிலாந்து கேப்டன்.
மேலும் பேசுகையில் “பணிச்சுமையை நிர்வகிப்பதும் மருத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதும் தான் காயத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரே உண்மையான வழி. ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு மார்ச் மாதம் செய்ததைப் போலவே தேவைப்பட்டால் இந்த கோடையில் கார்டிசோன் ஊசி போடலாம் என்றும் ஸ்டோக்ஸ் கூறினார்.
பென் ஸ்டோக்ஸ் இந்த வருடம் சென்னை அணிக்காக விளையாட 16.25 கோடிகளுக்கு வாங்கப்பட்டார். ஆனால் பெரிதாக எந்த தாக்கத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவருக்கு கால்களில் காயம் வலை பயிற்சியின் போது ஏற்படுத்தினால் விளையாட முடியாமல் போனது குறிப்பிடதக்கது.