இந்திய அணியின் நிர்வாகம் சிறப்பானது. எனக்கு அது போன்ற நிர்வாகம் அமையவில்லை – டிவில்லியர்ஸ் கருத்து.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உ
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.
நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.
இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது.
நீண்ட காலங்களுக்கு பிறகு சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது குறித்து டி வில்லியர்ஸ் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் குறித்து அவர் கூறுகையில், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மீது ஏற்பட்ட விமர்சனங்களை நான் புரிந்து கொள்கிறேன்.இந்த T20 உலகக்கோப்பையை வெல்வதற்கு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி தேவை என்பது 20 வயது வீரர்களுக்கு கூட தெரியும். எனக்கு 35 வயது இருக்கும் போது இது போன்ற அணி நிர்வாகம் அமைந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.
இப்போதே ரோகித் மற்றும் விராட் ஆகியோரை தேர்வு இந்தியா தங்களுடைய அதிரடியான அணுகுமுறையை காண்பித்துள்ளது. இந்தியா டி20 உலகக் கோப்பை பற்றி தெளிவாக சிந்திக்கிறது. இது நல்ல முடிவாகும். இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வெல்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எப்போதும் நல்ல வீரர்களை வைத்து விளையாட வேண்டும்” என்று கூறினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் T20 போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.