புள்ளி பட்டியலில் அதே இடத்தை தக்க வைத்து கொண்ட நியூசிலாந்து அணி. இலங்கை அணிக்கு மற்றுமொரு தோல்வி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 41வது போட்டியை இலங்கை அணி மற்றும் நியூசிலாந்து அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இலங்கையின் இந்த உலக கோப்பை சுற்றில் அத
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 41வது போட்டியை இலங்கை அணி மற்றும் நியூசிலாந்து அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இலங்கையின் இந்த உலக கோப்பை சுற்றில் அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டது. ஆனால் நியூசிலாந்து அணிக்கு ஒரு வெற்றி தேவைப்படுகின்றது புள்ளி பட்டியல் அரை இறுதி சுற்றுக்கு செல்ல.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதற்கு ஏற்றார் போல நியூசிலாந்து அணி இலங்கை அணி 171 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. இலங்கை அணி அதிகபட்சமாக பரேரா 51 ரன்களையும் தீக்ஷனா 38 ரண்களும் டி சில்வா 19 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். எனவே இலங்கை அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தது.
நியூசிலாந்தின் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வேலை செயல்பட்டனர். போல்ட் மூன்று விக்கெட்டுகளையும் லாக்கி பெர்குசன், சண்டனர் மற்றும் ரவீந்திர தலா இரண்டு விக்கெட்டுகளையும் சவூதி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 172 ரன்கள் இலக்காக் கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 23.2 அவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்தின் அதிகபட்சமாக கான்வே 45 ரன்கள் மிட்சல் 43 ரன்களையும் ரச்சின் 42 ரன்களையும் குவித்து இருந்தனர். எனவே நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் பின் நடக்க இருக்கும் பாகிஸ்தான் இங்கிலாந்தின் போட்டியில் பாகிஸ்தான் இலங்கை இங்கிலாந்து அணியை 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இந்திய அணியை அரைஇறுதி சுற்றில் மோதும் இல்லையென்றால் நியூசிலாந்து அணி தகுதி பெறும்.