இவர் அணியில் இருப்பதால் அணியில் உள்ள வீரர்கள் பயமில்லாமல் இருகின்றார்கள் – ஜாக் காலிஸ்

உலகக்கோப்பை 2023 ல் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரா

By ·

உலகக்கோப்பை 2023 ல் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்கள் எதிர்பாரத நிலையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து டி20 தொடர்களை விளையாடி அதில் இந்திய அணி 4-1 என்று வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ரின்கு சிங் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இதில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார்யாதவ் செயல்பட்டு இருந்தார். இந்திய அணி தற்போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டுக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது.

அதற்கு முன்னோட்டமாகவே நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த தொடரில் அவர் பினிஷராக கடைசில் களமிறங்கு இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுதுள்ளார். அவர் 5 போட்டிகளில் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் 105 ரன்களை குவித்துள்ளார்.இவரது அதிரடியின் ஆட்டத்தை பார்த்து முன்னாள் தென்னாபிரிக்கா அணியின் வீரர் காலிஸ் புகழ்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

ரின்கு சிங் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் அவர் கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்காக என்ன செய்தார் என்று அனைவரும் பார்த்து இருப்பீர்கள் அது உங்களுக்கு என்னவென்று தெரியும். அவர் மிகவும் சிறப்பாக ஆட்டத்தை முடிக்க முடித்து வைக்கின்றார். அவர் தேவைப்படும்போது தனது அதிரடியை ஆட்டத்தை காண்பித்து வருகின்றார். இந்தியா அணி ஆறாவது இடத்திற்கு பொருத்தமான வீரர் அவர்தான் அவர் அதிரடியாக ஆறாவது இடத்தில் விளையாடுவதால் அனைத்து வீரர்களும் சற்று பயமில்லாமல் நிதானமாக விளையாடி வருகின்றார்கள்.

அவரால் மற்றவர்களுடன் சேர்ந்து அபாயகரமான ஆட்டத்தை முடித்து வைக்க முடியும். யாராவது சரியாக விளையாடாமல் போனால் கூட அவர் அந்த பொறுப்பை ஏற்று ஆட்டத்தில் சரியாக முடிப்பார். கடைசி நேரத்தில் ரின்கு இருக்கின்ற பயத்தினால் மற்ற பேட்ஸ்மென்கள் தைரியமாக விளையாடி ஆட்டத்தை முடிக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை