இந்த வெற்றிக்கு காரணம் இளமையான விக்கெட் கீப்பர் தான் – ருதுராஜ் பேச்சு

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 29ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்ப

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 29ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது. அதில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து206 ரன்களை குவித்தது. ரஹானே ஆரம்பத்தில் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் ரச்சின் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தார்.

அதன் பின் ருதுராஜ் சிறப்பாக அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 69 ரன்களை குவித்து இருந்தார் அதில் 5 சிக்சரும் 5 பவுண்டரிகளும் அடங்கும். ஆனால் அதன் பின் வந்த மிட்சல் சற்று நிதனகமாக விளையாடஅணிக்கு அந்த நேரத்தில் ரன்கள் பெரிய அளவில் வரவில்லை. இருப்பினும் மிட்சலுக்கு முன்னதனாகவே துபே ருதுராஜ் உடன் இணைந்து அவரும் ரன்களை குவித்து இருந்தார்.மிட்சல் ஆடமிழந்ததற்க்கு பின் அனைத்து ரசிகர்களும் எதிர்பாத்து கொண்டு இருந்த தல தோனி களமிறங்கினார். அவர் வந்த போது 20வது ஓவரை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசி இருந்தார்.

அந்த ஓவரில் தோனி ஆடிய நான்கு பந்துகளில் 6,6,6,2 என அந்த ஓவரை சிறப்பாக அடித்து இருப்பார். அவருக்கு 42 வயது என்றால் யாரும் நம்ப கூட மாட்டர்கள். அந்த அளவிற்கு அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. துபே 38 பந்துகளில் 66 ரன்களை அவர் குவித்து இருந்தார். அதில் 10 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். அதன் பின் பேட்டிங் செய்த மும்பை அணி ஆரம்பத்சில் அதிரடியாக விளையாடினாலும் அதன் இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 105 ரன்களும் திலக் வர்மா 31 ரன்களும் இஷான் கிஷன் 23 ரன்களையும் அடித்து இருந்தார்.

எனவே சென்னை அணி 20 ரன்கள் வித்தியாத்தில் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணி சார்பில் பத்திரனா நான்கு விக்கெட்டுகளையும் ரஹ்மான் அம்ற்றும் தேஷ் பாண்டே தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இந்த வெற்றி சென்னை அணியின் 150 வெற்றியாகும். அது மட்டுமல்லாமல் இது சென்னை அணிக்காக தல தோனியின் 250வது வெற்றியாகும். இதில் சென்னை அணியி வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் இருந்தியாக வந்து தல தோனி அடிந்த அந்த 20ரன்கள் தான் என்று கூறலாம். இந்த ஐபிஎலில் வெளி மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

போட்டி குறித்து ருதுராஜ் கூறுகையில், அந்த மூன்று சிக்ஸர்களை அடித்த இளம் விக்கெட் கீப்பர் எங்களுக்கு நிறைய உதவினார், அது வித்தியாசத்தை நிரூபித்தது. இந்த வகையான மைதானத்திற்கு எங்களுக்கு அந்த 10-15 கூடுதல் ரன்கள் தேவைப்பட்டது. நடுத்தர கட்டத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். அவர்கள் சில சிறந்த ஷாட்களை அடித்த போதிலும், நாங்கள் பந்தின் மூலம் எங்கள் டெத் ஓவர்களில் சிறப்பாக இருந்ததாக உணர்கிறேன். பவர்பிளேயில் 6 ஓவர்கள் 60 எடுத்திருப்பேன்.

இந்த மைதானத்தில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் நீங்கள் குறியாக இருக்க வேண்டும். எங்கள் பேபி மலிங்கா இன்று நன்றாக பந்து வீசினார், அவர் அந்த யார்க்கர்களை அடித்தார். துஷார், ஷர்துல் ஆகியோரும் சிறப்பாகச் செயல்பட்டனர் என்பதை மறந்துவிடக் கூடாது. (எதிர்வரும் திட்டங்களைப் பற்றி) நாம் எளிமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அனைவரையும் ஒரு நல்ல இடத்தில் இருக்க ஊக்குவிக்கவும், அதே வழியில் தொடரவும். ஜிங்க்ஸ் கொஞ்சம் நிக்கலைச் சுமந்து கொண்டிருந்தார், எனவே அவர் திறப்பது நல்லது என்று நினைத்தார். நான் எங்கும் நன்றாக பேட்டிங் செய்கிறேன், மேலும் அணியின் கேப்டனாக இது கூடுதல் பொறுப்பு.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை