நாங்கள் இவ்வாறு சிறப்பாக செயல்பட இந்திய அணி தான் காரணம்- ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் நேற்று34-வது போட்டியை நெதர்லாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதின. இதற்கு முன்பு புள்ளி பட்டியல் ஆப்கானிஸ்தான்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் நேற்று34-வது போட்டியை நெதர்லாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதின. இதற்கு முன்பு புள்ளி பட்டியல் ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திலும் நெதர்லாந்து அணி எட்டாவது இடத்திலும் இருந்து வந்தது.
ஆப்கானிஸ்தானின் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று இரண்டில் மட்டுமே தோல்வி தழுவி தற்போது பலம் வாய்ந்த அணியாக நேற்றைய போட்டியில் மோதின. இதற்க்கு முன்பு நெதர்லாந்து அணி கடந்த 5 போட்டிகளில் இரண்டில் மட்டும் வெற்றி நேற்றைய போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் தேர்வு செய்தது ஆனால் அது அவர்களுக்கு சற்றும் கைகொடுக்கவில்லை.
நெதர்லாந்து அணிக்கு பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. நெதர்லாந்து அணி 46.3 ஒவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 58 ரன்களும் மேக்ஸ் 42 ரன்களும், ஆங்கர் மேன் 29 ரண்களும் மட்டுமே அடித்திருந்தனர். ஆப்கானிஸ்தானின் சார்பில் நபி மூன்று விக்கெட்டுகளையும் நூர் அகமது இரண்டு விக்கெட் களையும் ரஹ்மத் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்ததனர். மீதமுள்ள நான்கு விக்கெட்டுகளும் நெதர்லாந்தணியின் மோசமான பேட்டிங்கால் மீதம் இருந்த நாக்கு விக்கெட்டுகளையும் இழந்து தவித்தது நெதர்லாந்து அணி.
180 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 31.3 அவர்களின் 3 விக்கெட் இழப்பிற்கு 181ரன்களை குவித்து எளிதாக இந்த போட்டியை வெற்றி பெற்று விட்டது. ஆப்கானிஸ்தானின் சார்பாக ஷைடி 56 ரன்கள் ரஹ்மத் ஷா 52 ரன்கள் உமர் சாய் 31 ரன்களையும் அடித்து இருந்தனர். நெதர்லாந்து அணியின் சார்பில் சாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே மற்றும் லோகன் வான் பீக் தலா ஒரு விக்கெட்டு மட்டுமே எடுத்து இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது 5 வது இடத்தில் ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது.
நேற்றைய வெற்றி குறித்து பேசி ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் ட்ரோட் கூறுகையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் தோல்வி தழுவியது உண்மைதான் ஆனால் அந்த போட்டியில் தான் எங்களுடைய ஆற்றல் வெளிவந்ததை நாங்கள் கண்டிருந்தோம். நாங்கள் இந்திய அணியை தோல்வி அடைந்ததும் எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதுதான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளிலும் ஆசிய கோப்பையிலும் வெற்றிக்கு நெருக்கத்தில் வந்து வெற்றியை தவற விட்டு இருந்தோம். ஒரு ரன்னுக்கு இரண்டு விக்கெகட்டுகள் எழுந்திருந்தாலும் அத போட்டியில் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் சொல்லியிருந்தோம். நாங்கள் மீண்டும் விஷயங்களில் நல்ல முடிவு முறையில் இருக்க வேண்டும். மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கும் அடுத்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியை எடுத்து செல்ல வேண்டும் என்றும் நாங்கள் நல்ல நிலைக்கு செல்வோம் என்று அவர் கூறியிருந்தார்.