அஷ்வின் செய்த செயலால் இங்கிலாந்து அணிக்கு அடித்த ஜாக்பாட். பேட்டிங் செய்வதற்கு முன்பே ரன்களை கொடுத்த அஷ்வின். என்ன செய்தார் தெரியுமா??
இங்கிலாந்து அணி பீlல்டிங் செய்வதற்கு முன்பே ரன்களை வழங்கிய இந்திய அணி. இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 - 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. அதில் இந்திய அணி இன்று சிறப்பான பந்து வீச்சின் வெளிப்பாடாக இந்திய அ
இங்கிலாந்து அணி பீlல்டிங் செய்வதற்கு முன்பே ரன்களை வழங்கிய இந்திய அணி. இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. அதில் இந்திய அணி இன்று சிறப்பான பந்து வீச்சின் வெளிப்பாடாக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.
மூன்றாவது போட்டியானது நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணிக்கு பெரிய அடியாக முதல் செஷன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. அதன் பின் ரோஹித் ஷர்மாவும் ஜடேஜாவும் இணைந்து இந்திய அணிக்கு சிறப்பான பார்ட்னர் ஷிப் அமைத்து இருந்தனர். அதன் பின் ரோஹித் ஷர்மாவும் ஆட்டமிழந்து வெளியேற அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கானுடன் இணைந்து ஜடேஜா ரன்களை குவித்து வந்தனர்.
எதிர்பாராத விதமாக சர்ப்ராஸ் கான் ரன் அவுட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 326 ரன்களை குவித்து இருந்தது. இத்தகைய ரன்களை குவிக்க இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தது ரோஹித் ஷர்மாவும் ஜடேஜாவும் மற்றும் சர்ப்ராஸ் காணும் தான். தனது அறிமுகப்போட்டியிலே இந்திய அணிக்காக அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற வாரலற்று சாதனையும் அவர் படைத்தார்.
இந்திய அணியில் சார்பில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் படிதாரும் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 131 ரன்களிலும் அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கான் 62 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். குல்தீப் 4 ரன்களிலும் ஜடேஜா 112 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தற்போது அஷ்வினும் ஜூரேல் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இதில் அஷ்வின் ஆடுகளத்தில் நடுவில் ஓடியதற்காக இந்திய அணிக்கு அபராதம் அளித்து. அந்த அபாரததில் இங்கிலாந்து அணிக்கு இன்னிங்க்ஸ் தொடங்குவதற்கு முன்பே 5 ரன்களை வழங்கினார்கள். ஜடேஜா இதற்க்கு முன்பு இதே போல் செய்து இருந்தார் அதக்காக முதல் முறை எச்சரிக்கை மட்டுமே விதிக்கப்பட்டது. மீண்டும் அஷ்வின் அந்த தவறை செய்ததற்காக இங்கிலாந்து அணிக்கு 5 ரன்களை வழங்கினார்கள். அஷ்வின் 25 ரன்களிலும் ஜூரேல் 26 ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.