விளக்குகளின் கீழ் பேட்டிங் செய்ய விக்கெட் சிறப்பாக இருந்தது. ஆனால் அதை ஒரு சாக்காக கொடுக்க விரும்பவில்லை – ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேச்சு.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்த

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது . ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து நேற்று இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும் விராட் கோலி 54 ரன்களுக்கும் ரோஹித் ஷர்மா 47 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வூட் தலா 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

241 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் அதன் பின் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி இந்திய அணியை எளிதாக இறுதிப் போட்டியில் வென்றனர். ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 241 ரன்களை குவித்து வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 137 ரன்களும் மார்னஸ் லாபுசாக்னே58 ரன்களும் மார்ஷ் 15 ரன்களையும் அடித்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 ஒரு விக்கெட்டையும் மட்டுமே வீழ்த்தி இருந்தன. எனவே ஆஸ்திரேலியா அணி 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து ரோஹித் ஷர்மா சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

ரோஹித் ஷர்மா கூறியது:

அதாவது, முடிவு நம் வழியில் செல்லவில்லை, அந்த நாளில் நாங்கள் போதுமானதாக இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அணிக்கு பெருமை. அது இருக்கக் கூடாது. நேர்மையாக, 20-30 ரன்கள் எடுத்தால் நன்றாக இருந்திருக்கும். KL மற்றும் விராட் பேட்டிங் செய்யும்போது, ​​​​அந்த கட்டத்தில் 270-280 என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம், நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தோம். 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தது.

போர்டில் 240 ரன்களுடன், நாங்கள் ஆரம்ப விக்கெட்டுகளை விரும்பினோம், ஆனால் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் ஆகியோருக்கு நன்றி. அவர்கள் எங்களை முற்றிலும் ஆட்டத்திலிருந்து வெளியேற்றினர், மேலும் விளக்குகளின் கீழ் பேட்டிங் செய்ய விக்கெட் சிறப்பாக இருந்தது என்று நினைத்தேன். அதாவது விளக்குகளின் கீழ் எங்களுக்குத் தெரியும், அது நன்றாக இருக்கும், ஆனால் அதை ஒரு சாக்காக கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் போதுமான அளவு பேட் செய்யவில்லை, ஆனால் அந்த பெரிய பார்ட்னர்ஷிப்பை தைத்ததற்கு நடுவில் இருந்த அந்த இரண்டு பேருக்கும் பெருமை.என்றும் அவர் கூறி இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை