நேற்றைய இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பெண் காவலரை தாக்கிய இளைஞர். இணையத்தில் பரவும் வீடியோ.
அகமதாபாத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அங்கிருந்த பெண் காவலரை இளைஞர் ஒருவர் தாக்கியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அ
அகமதாபாத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அங்கிருந்த பெண் காவலரை இளைஞர் ஒருவர் தாக்கியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.
உலகக்கோப்பை ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியை அகமதாபாத்தில் நடத்த வேண்டாம் வேறு ,மைதானத்தை மாற்றி அமைக்குமாறு கேட்டு கொண்ட நிலையில் ICC மற்றும் பிசிசிஐ அதை பற்றி ஏதும் அவர்கள் அதே மைதானத்தில் விளையாடும்படியும் கூறி இருந்தது. ஆனால் நேற்று நடத்த கோஷங்கள் தான் தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் அங்கு இருந்த பெண் காவலர் ஒருவரை இளைஞர் ஒருவர் தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.
30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர். இந்த செயலுக்கு கம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
This is another video from Narendra Modi Stadium, #INDvPAK match.💥
— Amock (@Politics_2022_) October 15, 2023
An audience misbehaved with a lady security police officer, and got slapped back.
The shameless guy was talking with arrogance, there are people who will defend this too. pic.twitter.com/vRiwX9CLQz
அதில் பெண் காவலர் ஒருவர் இளைஞரிடம் ஏதோ ஒன்று கேட்டு கொண்டு இருக்கிறார். கேள்வி கேட்டதால் கோபமுற்ற இளைஞர் அந்த பெண் காவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். அதனால் அந்த பெண் காவலர் அந்த இளைஞரை கன்னத்தில் தாக்க அதற்க்கு அந்த இளைஞரும் பதிலுக்கு அந்த காவலரை தாக்கினார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.