ஒரே பிளேயிங் 11 வைத்து விளையாட காரணம்? – மாஸ் பதில் கூறிய தோனி.
ஐபிஎல் 2023 க்கான 67 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. இதில் அற்புதமான வெற்றியை பதிவு செய்து சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுளைந்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கையே த
ஐபிஎல் 2023 க்கான 67 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. இதில் அற்புதமான வெற்றியை பதிவு செய்து சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுளைந்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கையே தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே மற்றும் ருதுராஜ் அணிக்கு அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர்.
79 ரன்கள் இருந்த நிலையில் ருதுராஜ் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த டுபேவுடன் இணைந்த கான்வே அதிரடியை காட்ட தொடங்கினார். டுபே மற்றும் கான்வே அற்புதமாக விளையாடி டெல்லி அணியின் பௌலிங்கை சிதறடித்தனர்.9 பந்துகளில் 22 ரன்களை அடித்து வெளியேற, தல தோனி களமிறங்கினார். இந்நிலையில் கான்வே 87 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த ஜடேஜா 7 பந்துகளிலே 20 ரன்களை அடித்கார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது சென்னை அணி.
224 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே சொதப்பி வந்தது. ப்ரித்வி ஷா 5 ரன்களிலும் அதன் பின் வந்த சால்ட் 3 ரன்களில் வெளியேற ரூசோ ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது. சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியமால் திணறி வர யாஷ் தூள் 13 ரன்களில் வெளியேறினார். வரிசையாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியே வந்தனர்.
14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. மற்றொரு புறம் தனி ஆளாக போராடி வந்தார் அணியின் கேப்டன் வார்னர். அமன் 7 ரன்களில் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். தனியாக போராடி வந்த வார்னர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 6 ரன்களிலும் வெளியேற, குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
தோனி கூறியது :
இந்நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய தோனி சென்னை அணியின் செயல்திறன் குறித்து விளக்கினார். அவர் கூறுகையில் “வெற்றி பெறுவதற்கான ரகசியம் எதுவுமே கிடையாது. நீங்கள் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து வர்களுக்கு உரிய இடங்களை வழங்க வேண்டும். மேலும் அவர்கள் வலுவாக இல்லாத பகுதிகளில் அவர்களை வளர்க்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் யாரவது ஒருவர் அணிக்காக இடங்களை தியாகம் செய்யவேண்டிய நிலை வரும்.
நிர்வாகத்திற்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனாலும் வீரர்கள் தான் முக்கியமானவர்கள். வீரர்கள் இல்லை என்றால் எதுவும் நடக்காது. இறுதி ஓவர்களில் துஷார் தேஷாண்டே தன்னுடைய நம்பிக்கையை வளர்த்து கொண்டுள்ளார். அவருக்கு தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கான்வே மற்றும் கெய்க்வாட் எப்போதும் அணியைப் பற்றியே சிந்திக்கிறார்கள், அவர்களின் தனிப்பட்ட சாதனைகளில் கவனம் செலுத்துவதில்லை.
நீங்கள் தொடர்ந்து அதே வீரர்களை விளையாடும்போது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். பந்து வீச்சாளர்களும் பொறுப்பேற்று கொள்வார்கள்.பத்திரனாவின் டெத் போலிங் மிகவும் சிறப்பானது. துஷார் தேஷ் பாண்டே அதனை தற்போது வளர்த்துகொண்டுள்ளார். வெளியில் இருந்து வீரர்களை கணிப்பது கடினம். வீரர்களுக்கு உரிய சுற்று சூழலை அணியில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் 10 சதவிகிதம் செயல்திறனுடன் வந்தாலும் அவர்களை 50 சதவிகிதம் செயல்திறனை கொண்டுவர முடியும் என்ட்ரி தெரிவித்தார் தோனி.