இந்த இரண்டு அணிகள் மட்டும் தான் சரியாக வீரர்களை ஏலத்தில் எடுத்தார்கள். இருந்தாலும் அவங்களுக்கு அதிகமான பணம் தேவையா? – டி வில்லியர்ஸ்.

ipl2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற்க்க

By ·

ipl2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற்க்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. இவர் சர்வதேச போட்டிகளில் 2 கோப்பைகளையும் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கேப்டனாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று இருந்தார்.

இது போன்ற வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு எடுத்தது இந்திய ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அதற்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது. இது குறித்த தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் டிவில்லியர்ஸ் கூறுகையில் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் சிறந்த பவுலர்கள் தான் ஆனால் அவர்களுக்கு இவ்வளவு கோடி தொகை தொகையா என்பதை குறித்து ரொம்ப யோசிக்க வேண்டும்.

ஐபிஎல் போட்டியில் பந்துவீச்சாளர்களின் தேவை அதிகமாக இருப்பதால் தான் இது போன்று பந்துவீச்சாளர்கள் அதிக விலைக்குப் போக வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் சிறந்த சிறப்பாக செயல்பட்ட அணிகள் என்று பார்த்தால் அது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தான். இந்த இரண்டு அணிகளும் ஏலத்தில் குறைவான விலையில் பல திறமையான வீரர்களை வாங்கி விட்டது.

அவர் இவர்கள் இருவரும் மட்டுமே அறிவை பயன்படுத்தி ஏலத்தில் வீரர்களை எடுத்தனர். மற்ற அணியினர் உணர்ச்சிவசப்பட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் குறைவான விலையில் திறமையான வீரர்களை வாங்கி இருந்தனர். குறைந்த விலைக்கு வாங்குவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் பாராட்டி இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி அனுபவமிக்க வீரராக முகமது நபி மற்றும் ஸ்ரேயாஸ் கோபாலை குறைந்த விலைக்கு அவர்கள் வாங்கி விட்டனர் இதன் மூலம் அவர்கள் பல நன்மைகளை பெறுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

மற்ற அணிகள் வீரர்களை 20 கோடிக்கு கொடுத்து வாங்கி கொண்டு இருந்த நிலையில் மும்பை அணி மதுசங்கா, துஷாந்த், கோயிட்சே போன்றபந்துவீச்சாளர்களை குறைந்த விலைக்கு அவர்கள் வாங்கி விட்டதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி கோயிட்டே, மதுசங்கா மற்றும் துஷாராவுக்கு சேர்த்து மொத்தமாகவே 15 கோடி ரூபாய் தான் செலவு செய்திருப்பதாகவும் ஆனால் ஒரு வீரருக்கு மற்ற அணிகள் 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாகவும் மற்ற அணிகளை அவர் சாடி இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை