“முக்கிய வீரர்களை காப்பாற்ற இது போன்று தந்திரமாக செயல்பட்டு வருகிறார்கள்” – முன்னாள் பாக்.வீரரின் குற்றச்சாட்டு.
ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான வாசிம் அக்ரம், மொயின் கான், சோயப் மாலிக் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் பாபர் ஆசாமின் கேப்டன் திறன் குறித்து கேள்வி எழுப்பியு
ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான வாசிம் அக்ரம், மொயின் கான், சோயப் மாலிக் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் பாபர் ஆசாமின் கேப்டன் திறன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் இத்தகைய தோல்வி பாகிஸ்தானில் உள்ள பல கிரிக்கெட் ரசிகர்களை ஏமற்றியுள்ளது.பாபர் ஆசாமின் கேப்டன்சி பற்றி சிந்திக்க வைத்துள்ளது.
பாகிஸ்தானின் மிக முக்கியமானமுன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான வாசிம் அக்ரம் கூறுகையில் அணியின் செயல்திறன் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரைப் பொறுத்தவரை, இந்த தோல்விக்கான பொறுப்பு ஒரு தனி நபரின் மீது அல்ல, மாறாக தலைவர், தேர்வாளர்கள், கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களின் கூட்டு முயற்சிகளில் உள்ளது. அத்தகைய மதிப்புமிக்க போட்டியில் வெற்றியை அடைய, இந்த அணியில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்துகிறார்.
சோயிப் மாலிக் கூறுகையில், ஒரு அனுபவமிக்க ஆல்-ரவுண்டர பாபர் ஆசாமின் மீது பழியைப் போடுகிறார். அவரது கண்ணோட்டத்தில், பாபர் ஆசாமின் பேட்டிங்கில் இருந்து ரன்கள் வருவதில்லை ஆனால் அதை மறுபதில்லை. அவருக்கு ஒரு பேட்ஸ்மேனாக ‘கிங்’ பட்டம் கிடைத்தது. இருப்பினும், தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை அவர் ரசிகர்களை ஈர்க்கப்படவில்லை. கேப்டனாக இருந்து வரும் எதிர்பார்ப்புகளை அசாம் பூர்த்தி செய்யவில்லை என்று அவர் வாதிடுகிறார். மேலும் பாகிஸ்தான் அணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவது வருகின்றனர்.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் அகமது சேஷாத் கூறுகையில், நான் சில வீரர்களுடன் பேசி இந்த விஷயங்களை பற்றி தெரிந்து கொண்டேன். பாகிஸ்தான டிரேசிங் அறையில் சமமாக வரவேற்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் வீழ்த்துவதற்காக பார்க்கின்றார்கள். தற்போது தயாப் தாகீர் கொண்டுவரப்பட்டு பாகிஸ்தான் அணிக்குள் கொண்டுவரப்பட்டு ஆனால் அவர் உடனடியாக அவரை டிராப் செய்து விட்டனர். தற்போது கொண்டுவரப்பட்டு இருக்கும் உசாமா மிருக்கு உலகக் கோப்பைக்கு முன்கூட்டியே வாய்ப்பு கொடுங்கள் என்று நாங்கள் அப்போது கூறி வந்தோம்.
அவர் ஒரு நல்ல சுழற்பந்து வீச்சாளர். அவர் பழைய பந்தில் சிறப்பாகபந்து வீசுவார். ஆனால் அவரை 11 ஓவரில் வாய்ப்பு கொடுக்கிறார்கள். பாகிஸ்தான் அணியில் உள்ள சில குறிப்பிட்ட வீரர்களை காப்பாற்றுவதற்காக இந்த மாதிரி தந்திரமாக வேலை செய்து அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஸ்பின்னர் அப்ரார் அகமது கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் முன்கூட்டியே பவர் இருந்தோம் இவர்கள் நாங்கள் கூறும் எங்களுடைய ஆட்கள் என்பதன் காரணத்திற்காகவே அவர்களை அணிக்குள் சேர்க்க மறுக்கிறார்கள் என்று அகமது சேஷாத் தாக்கத்தை தெரிவித்து இருந்தார்.