அவர்களை பேட்டிங்கிற்காக மட்டும் இல்லை, அவர்கள் இதற்காக இந்திய அணியில் கட்டாயம் இருக்க வேண்டும் – முன்னாள் இந்திய வீரர் அதிரடி.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உ
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. அதற்க்கு இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இந்திய அணியில் இருக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் கூறியிருந்தார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.
இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விறாட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு இருவரும் உலகக்கோப்பையில் இணைய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
அவர்களின் பேட்டிங் திறமையானது தவிர, ரோஹித் மற்றும் கோலி களத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
இது இந்திய வரிசைக்கு மேலும் வலிமையை சேர்க்கும். விராட் கோலியின் ஃபார்ம் கடந்த 1.5 வருடங்களாக சிறப்பாக உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையிலும் அவர் அற்புதமாக விளையாடினார். எனவே, வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் திறமை குறித்து எந்த விவாதமும் இருக்கக்கூடாது. ரோஹித் சர்மா மற்றும் விராட் என்பது ஒரு பெரிய அம்சம். கோலி இன்னும் சிறந்த ஃபீல்டர்கள், ”என்று கவாஸ்கர் கூறினார்.
“சில நேரங்களில், நீங்கள் 35-36 வயதில் இருக்கும் போது நீங்கள் மெதுவாக வீசுவீர்கள்; உங்கள் வீசுதல் இனி நன்றாக இல்லை. எனவே, களம் அமைக்கும் போது உங்களை எங்கு வைத்திருப்பது என்பது பற்றிய விவாதங்கள் உள்ளன. இந்த இருவருக்கும் அது ஒரு பிரச்சனையல்ல, ஏனென்றால் அவர்கள் இன்னும் பயங்கர பீல்டர்கள். டிரஸ்ஸிங் ரூமில் சீனியாரிட்டிக்கு கூடுதலாக, அவர்கள் களத்திலும் பங்களிப்பார்கள்” என்று கவாஸ்கர் மேலும் கூறினார்.