“அவங்க ஒன்னும் ஒரே மைதானத்தில் விளையாடவில்லை. வெவ்வேறு மைதானத்தில் தான் விளையாடுறாங்க” – சல்மான் பட்.

இந்திய அணி வெற்றி குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி அளித்த சல்மான் பட். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 33வது போட்டியில் இந்திய அணியும் ஸ்ரீலங்கா அணியும் மும்பையில் உள

By ·

இந்திய அணி வெற்றி குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி அளித்த சல்மான் பட். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 33வது போட்டியில் இந்திய அணியும் ஸ்ரீலங்கா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் ஒரு தோல்வியை கூட தழுவாமல் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பௌலிங்கை தேர்வு செய்தனர்.

92 ரண்களை நெருங்கிய நிலையில் சுப்மான் கில் மதுசங்க வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் மென்டீஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்தப் போட்டியில் விராட் கோலி சதத்திற்கு நெருங்கி சச்சினின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.மற்றொரு பக்கம் நிதானமாக ஆடி ரண்களை குவித்து கொண்டிருந்த ஷ்ரேயஸ் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்கள் அடித்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்து வெளியேறினார். முகமது ஷமி 2 ரன்கள் ஆட்டம் இருந்து வெளியேற ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் குவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 357 ரன்களை குவித்தது இந்திய அணி.இலங்கை அணிக்கு 358என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

358 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மாபெரும் தோல்வியை தழுவியது. இலங்கை அணிக்கு அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களும் தீக்ஷனா 6 ரன்களும் ரஜித்தா ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சிராஜ் விக்கெட்டுகளும் ஷமி விக்கெட்டுகளும் பும்ரா விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணி இலங்கை அணியை எளிதாக 300 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.

இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து பலரும் ஆதரவுகளை தெரிவித்து வந்திருந்தாலும் சிலர் அவர்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். அதாவது இந்திய அணி தனக்கு சாதகமான மைதானத்தில் ஆடுகளத்தில் விளையாடுகின்றது என்றும் பலர் இந்திய அணியை விமர்சித்து இருந்த நிலையில் அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் சல்மான் பட் தற்போது கருத்து ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறுகையில் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருப்பவர்கள் நம்மால் ஏதும் தடுக்க முடியாது.

ஆனால் இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடாமல் வெவ்வேறு மைதானத்தில் தான் விளையாடி வருகின்றது. அவர்களுக்கு ஒரே மைதானத்தில் இரண்டு போட்டிகள் கிடையாது. அவர்கள் சிவப்பு மற்றும் கருப்பு மண் என இரண்டு வகையான ஆடுகளத்திலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றார்கள். அடிப்படை அற்ற விஷயங்களை இந்தியா மீது பேசுவது மிகவும் தவறான செயல். இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது. இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது. என்று இந்தியாவை விமர்சனம் செய்தவர்களுக்கு சல்மான் பட் பதிலளித்துள்ளார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை