முட்டாள் தனமான யோசனையில் ஆடுகளத்தை அமைத்து உள்ளார்கள். அது யாருடைய யோசனை என்று தெரியவில்லை – அம்பதி ராயுடு
சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை 2023 இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில்இந்திய அணி தோல்வி தழுவியது. இந்திய இந்த உலகக் கோப்பை முழுவதும் பலம் வாய்ந்த அணியாக விளையாடியது லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப்போட்டி என அனைத்திலும் வெற்றி பெ
சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை 2023 இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில்இந்திய அணி தோல்வி தழுவியது. இந்திய இந்த உலகக் கோப்பை முழுவதும் பலம் வாய்ந்த அணியாக விளையாடியது லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப்போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வரை சென்றது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி எதிர்பார்க்காத விதமாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இறுதிப்போட்டி வரை இந்திய அணி செல்ல காரணமே இந்தியாவில் போட்டியில் நடைபெறுவது என்பதால் மைதானத்தின் ஆடுகளத்தை இந்திய அணி சாதகமாக பயன்படுத்திக் கொண்டது என்று பல கிரிக்கெட் வீரர்கள் குற்றம்சாற்றியுள்ளார்.அந்தப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். இரண்டாம் பாதியில் பனி வரும் காரணத்தினால் முதலில் பௌலிங் செய்கிறோம் என்று அவர் கூறியிருந்தார்.
இந்தியாவால் இறுதிப் போட்டியில் மொத்தம் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மாவின் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஒரு வலிமையான சக்தியாக நிரூபிக்கப்பட்டனர். இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 137 ரன்களை குவித்து இந்தியாவிடம் இருந்து ஆட்டத்தை திசை திருப்பி ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி பெற வழிவகுத்தனர்.
ஆடுகளம் உலர்ந்த நிலையில் அவர்களுக்கு பந்து வீசுவதற்கு சாதகமாக அமைந்தது அதன் பின்பு இந்திய அணி பந்து பந்து வீச்சு இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை. எனவே இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் தோல்வியை தழுவியது. அந்த ஆடுகளத்தை மைதானத்தில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாத காரணத்தினால் முதல் பாதியில் பேட்டிங் செய்ய கடினமாகவும் இரண்டாம் பாதியில் பனி வந்ததால் அவர்களுக்கு பேட்டிங் செய்ய எளிதாகவும் மாறியது என்றும் சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர். இது குறித்து பேசிய முன்னாள் இந்திய அணியின் வீரர் அம்பதி ராயுடு கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார்.
இறுதிப் போட்டியின் பயன்படுத்தப்பட்ட மைதானத்தின் ஆடுகளம் மிகவும் மந்தமாகவும் மெதுவாகவும் இருந்தது. இது யாருடைய யோசனை என்று எனக்கு தெரியவில்லை ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி பலம் வாய்ந்த அணியாகவே இருந்து வந்தது. ஆடுகளம் சரியாக இருந்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நீங்கள் ஆடுகள் அற்றை சிறப்பாக ஏதும் செய்ய வேண்டாம் அப்படியே வைத்திருந்தால் கூட இந்திய அணி பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறு இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை யாராவது இதை யோசித்தார்களா இல்லை வேண்டுமென்று செய்தார்களா என்று எனக்கு தெரியவில்லை.
Ambati Rayudu Does Feel that It was Management and Virat Fault for Not Picking him and at Biggest Stage It Turned out to be True
— Vikram Zaveri (@VikramZaveri3) November 25, 2023
Kohli Captaincy tenure 2 biggest Mistake was Selecting bowl vs Pak CT Not Selecting Rayudu instead of Shankar#AmbatiRayudu #ViratKohli pic.twitter.com/JArPXwSVB5
இது யாரும் வேண்டுமென்றே செய்திருக்க முடியாது ஆனால் இப்படி வேண்டும் செய்திருந்தால் அது முட்டாள்தனமான யோசனை. யாரும் வேண்டுமென்று இது போல செய்திருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன். இதுபோல அதிர்ஷ்டம் இல்லாத நேரங்களில் எது வேண்டுமானாலும் நடக்கும். உலகக்கோப்பை விளையாட இந்திய அணியே சிறந்த அணியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். திறமை மற்றும் அனுபவத்தின் காரணமாக 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் சிறந்த அணியாக இருந்து கோப்பையை வென்றது. ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி செயல்பாட்டால் சிறந்த அணியாக இருந்தது என்று அவர் கூறினார்.