என்னோட வேலையே அதுதாங்க – சென்னை அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய தோனி.

ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 55 போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க அட்டகரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர்.இருப்பினும் டெல்லி

By ·

ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 55 போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க அட்டகரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர்.இருப்பினும் டெல்லி அணியின் பௌலிங்கை கஷ்டபட்டு எதிர்கொண்டு வந்தனர். கான்வே 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அதற்க்கு பின்னரே ருதுராஜ் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேற, மொயின் அலியும் 7 ரன்களில் வெளியேறினார். டெல்லி அணியின் பௌலிங்கை சிறப்பாகவே இருந்து வந்தன. ஆட்டத்தில் டெல்லி அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. அதன் பின் அதிரடியை காட்டத் தொடங்கிய ராய்டு மற்றும் டுபே இணைந்து ரன்களை குவித்து வந்தனர்.

12 பந்துகளில் 25 ரன்களை அடித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் 117 ரன்களை எடுத்திருந்தது. ஆரம்பம் முதலே சென்னை அணியீன் பேட்ஸ்மேன்கள் சற்று திணறியே வந்த நிலையில் மஹேந்திர சிங் தோனி களமிறக்கிக்கினார்.தோனி தன்னுடைய அதிரடி ஆட்டத்தினால் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் போது தோனி 4 பந்துகளில் 2 சக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 19 ரன்களை விளாசினார். இறுதியில் சென்னை அணி 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த 167 ரன்களை அடித்தது. இந்நிலையில் இரண்டவது இன்னிங்கை ஆடிய டெல்லி அணியால் இந்த ஸ்கோரை எடுக்க முடியாத நிலையில் 140 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தோல்வியை தழுவியது டெல்லி

தோனி :

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய தோனியிடம் முரளி கார்த்திக் உங்களுக்கு அதிகமாக பந்துகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் திடீரென வந்து 200 ஸ்ட்ரீக்கிங் ரேட்டிற்க்கு மேலாக அடித்து விளாசுகிறீர்களே என்று கேட்டார். அதற்கு பதிலளித்த தோனி இது தான் என்னுடைய வேலை. நான் ரன்கள் எடுக்க விக்கெட்டிற்கு நடுவே ஓடுவேன் என்று எதிர்பார்காதீர்கள்.

அதுதான் என்னுடைய வேலை :

அணியின் மற்ற வீரர்கள் அவர்களது வேலையை சரியாக செய்கின்றனர். அந்த வகையில் என்னுடைய வேலையை சிறப்பாக செய்ய விரும்புகிறேன். எந்த பந்தாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கான பயிற்சியையும் நான் எடுத்து வருகிறேன். அது எனக்கு இந்த மாதிரியான சூழ்நிலைகளில் உதவியாக இருக்கிறது என்று கூறினார் தோனி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை