“இந்த வீரர் தான் இறுதிப் போட்டியில் ரன்களை குவிப்பார்” – ஹர்பஜன் சிங் கணிப்பு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய உள்ளது
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய உள்ளது. இந்த போட்டியானது வரும் நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இந்திய அணி இந்த உலக கோப்பையில் இதுவரை ஒரு தோல்வியை கூட கண்டிராமல் பலம் வாய்ந்த அணியாகவும் மற்றொன்று பக்கம் ஆஸ்திரேலியா அணியும் இரு தோல்விகளை தழுவி இருந்தாலும் அதன் பின் வந்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஞாயிறு அன்று இந்தியாவை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் ஒருமுறை அரை இறுதி சுற்றில் வந்து தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது. 31 வருடங்களாக தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. இந்திய அணியைப் பொறுத்த வரைக்கும் மூன்று துறைகளிலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது. அதாவது பவுலிங் பேட்டிங் மற்றும் பில்டிங் என மூன்று துறையில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அணிக்கு அதிக அளவில் ரன்கள் குவித்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் 700 ரன்களை கடந்து விட்டார் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் 500 ரன்கள் அடித்திருக்கின்றார்கள்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து எப்போதும் ஒரு விமர்சனம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது ஆனால் அதனை இந்திய அணி இந்த உலக கோப்பை போட்டியில் நிறைவு செய்து உள்ளது. கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இருவரும் இணைந்து அணிக்கு அற்புதமாக விளையாடி ரன்களை குவித்து இந்திய அணி வெற்றிக்கு ஒரு தூணாக இருக்கின்றார்கள். இந்த உலகக்கோப்பை தொடரிலும் ஒரு மிடில் ஆர்டரில் 500 ரன்கள் அடித்த வீரரும் ஷ்ரேயஸ் ஐயர் தான். இந்திய அணி குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், முகமது ஷமி மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
அது போன்ற விளையாட வேண்டும். போட்டி நடைபெறும் மைதானம் கில்லுக்குப் பிடித்துமான மைதானம் தான். அவர் எப்போதும் அங்கு தான் அதிக அளவில் ரன்களை எடுப்பார். இறுதிப்போட்டியில் அவர் பெரிய ரன்கள் எடுப்பார் என்று நான் கணிக்கின்றேன். இந்திய அணி மாற்று கிரிகெட்ட விளையாட வேண்டும். இறுதி போட்டிகள் எப்போதும் அழுத்தமாக தான் இருக்கும். யார் அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் பெரியப் போட்டிகளில் ஒற்றுமையாக செயல்படுவார்கள் என்றும் ஹர்பஜன் சிங் கூறியிருந்தார்.