இந்திய இளம் வீரர்களிடம் இதை தான் நான் கூறியிருக்கின்றேன் – இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேச்சு.
உலகக்கோப்பை 2023 ல் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரா
உலகக்கோப்பை 2023 ல் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்கள் எதிர்பாரத நிலையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து டி20 தொடர்களை விளையாடி அதில் இந்திய அணி 4-1 என்று வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ரின்கு சிங் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இதில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார்யாதவ் செயல்பட்டு இருந்தார். இந்திய அணி தற்போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டுக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது.
அதற்கு முன்னோட்டமாகவே இன்று நடைபெறும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இது குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் நாங்கள் உலக கோப்பையின் தோல்விக்கு பிறகு அது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது .அதிலிருந்து நாங்கள் மீண்டு வர மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அதை நாங்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை வென்ற போது அது எங்களுக்கு மற்றும் ஒரு எனர்ஜியாக அமைந்தது.
அந்த ஐந்து தொடரில் எங்கள் இளைஞர்கள் ஒன்றாக கைகோர்த்து பயமில்லாமல் அந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடினோம். அதேபோல் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாட விரும்புகிறோம். ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுவீர்கள் அதே போன்று இதிலும் விளையாடுங்கள் என்று நாங்கள் எங்கள் வீரரிடம் கூறியுள்ளோம்.நான் தற்பொழுது மகிழ்ச்சியாக செய்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
T20 இந்திய அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (சி), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (வி.கே.), ஜிதேஷ் சர்மா (வி.கே.), ரவீந்திர ஜடேஜா (வி.சி), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் , அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் தீபக் சாஹர்