அந்த இடத்தில் தான் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது – பெண் ஸ்டோக்ஸ் கேப்டன்சியை பாராட்டும் குமார் சங்கக்கார.
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது முடிந்த நிலையில் தற்போது வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில் இன்று கடைசி நாள். இன்று இரண்டவது இன்னிங்கை ஆடிவரும் ஆஸ்திரேலியாவிற்கு வெ
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது முடிந்த நிலையில் தற்போது வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில் இன்று கடைசி நாள். இன்று இரண்டவது இன்னிங்கை ஆடிவரும் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றிபெற 174 ரன்கள் தேவை. மூன்று விக்கெட்டுகளை மட்டுமே ஆஸ்திரேலியா இழந்த நிலையில் வெற்றி வெற்றிபெறுவதற்காக வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
ஆனாலும் இங்கிலாந்து இன்று முதல் 2 மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை எடுக்கும் பட்ச்சத்தில் இங்கிலாந்து வென்றிபெற வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்கின் போது இங்கிலாந்தின் ஷார்ட் பால் தந்திரம் அதிசயங்களைச் செய்தது. ஆஸ்திரேலியா தனது கடைசி நான்கு விக்கெட்டுகளை வெறும் 14 ரன்களுக்கு இழந்தது. இப்படிப்பட்ட நிலையில் இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார இங்கிலாந்து அணியின் விளையாட்டுத் திட்டத்தைப் பாராட்டினார்.
அவர் கூறுகையில் “ஒரு கேப்டனாக ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு ஆஸ்திரேலியா ஒரு ரன் எடுப்பது முக்கியமில்லை. அவர்களுக்கு பந்து நன்றாக ஸ்விங் ஆவதினால் அதனையே செய்கிறார்கள். சொல்லப்போனால் மைத்தனத்தில் பில்டர்களும் ஆஸ்திரேலியாவின் வீரர்கள் வாய்ப்புகளை எடுக்கத் தேவையான மைதனமாக மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டன. அந்த விஷியத்தில் தான் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்த விஷயம் சிந்தனை புத்திசாலித்தனமாக இருந்தது. கேப்டன்சி புத்திசாலித்தனமாக இருந்தது.
மேலும் இங்கிலாந்து ஏற்கனவே போட்டி டிராவில் முடிந்தால் தங்கள் திருப்தி அடையப் போவதில்லை என்று கூறியுள்ளது. மேலும் நேற்று இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சளர் மொயின் அலி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறியது குறித்தும். இந்த ஆஷஸ் பொதியில் சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலியின் ஆட்டம் எவ்வளவு முக்கியமானது என்றும், இங்கிலாந்து அணி ஜோ ரூட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார் சங்ககாரா.
இது குறித்து அவர் பேசுகையில் “இங்கிலாந்து எதிரணிக்கு இன்னமும் சிரமங்கள் கொடுக்க ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை. அதுதான் இங்கே குறைகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதுனம் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும், அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்து விக்கெட்டுகளைப் பெற முயற்சிக்க வேண்டும் என்பதையும் நாம் பார்த்தோம். இந்த இடத்தில் தான் மொயீனின் பங்கு முக்கியமானது.
இங்கிலாந்து அணி கண்டிப்பாக மொயின் அலியை மீண்டும் பந்துவீசச் செய்ய முயற்சிக்கும். ஆனால் நீங்கள் கேப்டனாக இருந்தால் மொயின் அலியின் காயம் குறித்து கவலைப்படுவீர்கள். ரூட் சிறப்பாக பந்துவீசுகிறார். ஆனால் அவர் மட்டுமே போதுமானவரா? என்று மேலும் தெரிவித்தார் சங்கக்கார. போட்டியை பொறுத்தவரையில் இரண்டாவது இன்னிங்கில் இங்கிலாந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை கட்டுக்குள் வைத்துள்ளது.