இந்த வீரர் தான் இந்திய அணியின் யுவராஜ் சிங். இளம் வீரரை புகழ்ந்த சுனில் கவாஸ்கர்.
இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான
இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்கள் எதிர்பாரத நிலையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து டி20 தொடர்களை விளையாடி அதில் இந்திய அணி 4-1 என்று வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ரின்கு சிங் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இதில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார்யாதவ் செயல்பட்டு இருந்தார். இந்திய அணி தற்போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டுக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது.
அதற்கு முன்னோட்டமாகவே நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த தொடரில் அவர் பினிஷராக கடைசில் களமிறங்கு இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுதுள்ளார். அவர் 5 போட்டிகளில் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் 105 ரன்களை குவித்துள்ளார்.இவரது அதிரடியின் ஆட்டத்தை சுனில் கவாஸ்கர் யுவராஜ் சிங் ஆட்டத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் கூறுகையில்,
திறமை – அது எல்லோருக்கும் கொடுக்கப்படுவதில்லை. நீங்கள் விளையாட்டை விரும்பலாம். நீங்கள் நாள் முழுவதும் விளையாடலாம், ஆனால் சில சமயங்களில் உங்களிடம் திறமை இல்லை என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் அவரால் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது, கடந்த 2-3 ஆண்டுகளாக அவர் அதைத்தான் செய்து வருகிறார். மீண்டும் இங்கே ஐபிஎல்லில், அவர் பல அணிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தார், இறுதியாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது மற்றும் அதை அவர் கைப்பற்றிய விதம் (ஆச்சரியமாக இருந்தது),” என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.
“இப்போது அவர் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்கிறார். இப்போது அவர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அவர்கள் இப்போது அவர் மற்றொரு யுவராஜ் சிங்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ரிங்கு சிங் – யுவராஜ் சிங். அதனால் நீங்கள் என்ன செய்ய முடியும் என்றால் இந்திய கிரிக்கெட்டுக்காக யுவராஜ் சிறப்பாக செயல்பட்டார், அப்போது அவர் சிறப்பாக செயல்பட்டிருப்பார்” என்று கவாஸ்கர் கூறினார். இன்று இந்திய அணி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவதுத T20 போட்டியை விளையாட உள்ளது. முதல் போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இன்றைய போட்டி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றைய போட்டியில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படுவார் என்றும் பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.