இது நம்ம கலாச்சாரம் கிடையாது. இந்த நடைமுறையை இந்திய அணியில் இருந்து மாற்ற வேண்டும் – இர்பான் பதான்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு வெவ்வேறு வடிவங்களில் தனித்தனி கேப்டன்கள் இருப்பது பற்றி இர்பான் பதான் தனது கருத்தை தெரிவித்து இருந்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 3 வடிவ சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வாளர்கள் சமீபத்தில் தேர்வு செய்தனர். டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டன
இந்திய கிரிக்கெட் அணிக்கு வெவ்வேறு வடிவங்களில் தனித்தனி கேப்டன்கள் இருப்பது பற்றி இர்பான் பதான் தனது கருத்தை தெரிவித்து இருந்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 3 வடிவ சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வாளர்கள் சமீபத்தில் தேர்வு செய்தனர். டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு முறையே கே.எல்.ராகுலும், சூர்யகுமார் யாதவும் கேப்டனாக செயல்படவுள்ளனர். இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறுகையில்,
“இது எதிர்காலத்திற்கான அறிகுறியாக இருக்கலாம், இதற்க்கு நான் பெரிய ரசிகன் இல்லை. ரோஹித் சர்மா ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது என்பது தெளிவாகிறது, எனவே நீங்கள் அவரை அங்கு பார்க்கவில்லை. நீங்கள் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான கேப்டனாக பார்க்கிறீர்கள். இருப்பினும், இந்த விஷயங்கள் முன்னோக்கி செல்வதை நீங்கள் பார்க்கலாம். வெவ்வேறு வடிவங்களுக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் இருகின்றார்கள். இது நம் கலாச்சாரத்தில் நடக்காமல் இருந்தால் நல்லது என்று நான் நம்புகிறேன்.”
இந்திய கலாச்சாரம் ஆஸ்திரேலிய அல்லது தென்னாப்பிரிக்காவில் இருந்து வேறுபட்டது, அங்கு இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன என்றும் அவர் கூறி இருந்தார். “ஒயிட்-பால் மற்றும் ரெட்-பால் கிரிக்கெட்டைப் பார்த்தால், எங்களிடம் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் மட்டுமே வித்தியாசமாக இருக்கிறார்கள்” – இர்பான் பதான் கூறியிருந்தார். மேலும் அவர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்களான அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு அணியில் அவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் சிலவற்றை பகிர்ந்து உள்ளார்.
“நாம் வெள்ளை-பந்து மற்றும் சிவப்பு-பந்து கிரிக்கெட்டைப் பார்த்தால், எங்களிடம் வித்தியாசமான இரண்டு அல்லது மூன்று வீரர்கள் மட்டுமே உள்ளனர், அங்கு நீங்கள் சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்ற வீரர்களைக் கருத்தில் கொள்ளலாம். எங்களிடம் பொதுவாக அனைத்து- வடிவமைப்பு வீரர்கள்.” ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷுப்மான் கில் போன்ற புதிய தலைமுறை வீரர்களும் மூன்று வடிவங்களிலும் விளையாடிய கூடிய வீரர்கள் உள்ளனர். ஒரே கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருப்பது இந்தியாவை நல்ல நிலையில் வைத்திருக்கும் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில்,
“எங்கள் இளைஞர்களைப் பற்றி பேசினால், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷுப்மான் கில் எல்லா இடங்களிலும் விளையாடுவதைப் பார்ப்பீர்கள். எனவே எங்கள் பெரும்பாலான வீரர்கள் அப்படித்தான், எல்லா வடிவங்களிலும் விளையாடுகிறார்கள் என்றும் அவர் கூறினார். அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தக்கவைக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு வகை வெள்ளை-பந்து வடிவங்களில் அவர் அணியை வழிநடத்துவாரா என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.என்றும் அவர் கூறிஇருந்தார்.