19 ஓவரில் தோனியை வீழ்த்த போட்ட திட்டம் இதுதான் – உண்மையைச் சொல்லிய சந்தீப் சர்மா – வீடியோ உள்ளே.
ஐபிஎல் 2023ல் நேற்று மிகவும் பரபரப்பான ஆட்டம் நடந்தது. சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இருவரும் நேருக்கு நேர் மோதினார்கள். இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் த
ஐபிஎல் 2023ல் நேற்று மிகவும் பரபரப்பான ஆட்டம் நடந்தது. சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இருவரும் நேருக்கு நேர் மோதினார்கள். இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதன் காரணமாக் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
ஆனால் தோனி எடுத்தது சரியான முடிவு தான என்ற குழப்பம் அனைவருக்குமே இருந்தது. ஏனெற்றால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் பிரமாத்தம்மாளை பேட் செய்து ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அற்புதமான பார்மில் ஓடிக்கொண்டிருந்த ரிதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
டெவன் கான்வே அரைசதம் விளாசினார். இவரை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் நடக்க முடியவில்லை. அனைவருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தா ராய்டு கூட சரியாக பிரகாசிக்க வில்லை, இந்நிலையில் கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி இரண்டு சிஸ்சர்கள் அடித்தார். இருந்த போதிலும் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்த போதிலும் பெரியதாக ரசிகர்களின் அன்பு இண்னும் தல தோனிக்கு கிடைத்து கொண்டுதான் இருக்கிறது. சென்னைக்கு 21 ரன்கள் தேவைப்படும் என்ற போது சென்னை அணி கேப்டன் தோனி 2 சிக்சர்கள் அடித்து போட்டியில் இண்னும் சென்னை இருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கினார். ஆனால் இருந்த போதிலும் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.
WHAT. A. GAME! 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 12, 2023
Another day, another last-ball finish in #TATAIPL 2023! 😎@sandeep25a holds his nerve as @rajasthanroyals seal a win against #CSK! 👍 👍
Scorecard ▶️ https://t.co/IgV0Ztjhz8#CSKvRR pic.twitter.com/vGgNljKvT6
அப்போது ராஜாதான் ராயல்ஸ் வீரர் சந்தீப் ஷர்மா ஒரு அற்புதமான யார்க்கரை வீசினார், எப்போதுமே யக்கர் போடும் போது ஹாலிகாப்டர் பார்க்கவிடும் தோனியால் அந்த பந்தை அடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட அற்புதமான ஒரு பந்தை சந்தீப் சர்மா வீசினார். இந்நிலையில் இலக்கை விட 3 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வீழ்ந்தது. இந்த தோல்விக்கு பிறகும் தோனி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் போட்டி முடிந்தப் பிறகு பேட்டி கொடுத்த சந்தீப் சர்மா கூறியபோது “கடைசி ஓவரை சிறப்பாக வீசியது எப்படி எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
— Ninja (@IPLcskMSD) April 13, 2023
அதற்கு பதிலளித்த சந்தீப் ஷர்மா கூறுகையில் “கடைசி ஓவரில் யார்க்கர்களை வீச வேண்டும் என்பதுதான் குறிக்கோள். வலைப்பயிற்சியின்போது நான் யார்க்கர்களை வீசிதான் பயிற்சி செய்திருக்கிறேன். லெக் சைட் பவுண்டரிகள் பெரியதாக இருந்ததால் தோனிக்கு நேராக யார்க்கர் வீச முற்பட்டேன் ஆனால், அது லோ புல்டாசாக மாற்றி சிக்ஸர் அடித்தார் தோனி. அதன்பிறகு லைனை மாற்றி யார்க்கர் வீசினேன். அதில் தோனி பந்தை தவறவிட்டார் அதுவே வெற்றிபெற காரணமாக இருந்தது என்று கூறினார் சந்தீப் சர்மா.