இந்த வருட ஐபிஎல் தொடரில் CSK அணி வெற்றி பெற அதிக வாய்புகள் உள்ளது! எப்படி தெரியுமா ?
கிரிக்கெட்டில் நடத்தப்படும் ஒருநாள் போட்டி, டி20 போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என இப்படி ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக ரசிகர் பட்டாளங்கள் இருந்தாலும். அனைத்து ரசிகர்களும் விரும்பி பார்க்கும் கிரிக்கெட் தொடர் தான் இந்த ஐபிஎல் தொடர். ஏன் கிரிக்கெட்டை பார்க்காத மக்களுக்
கிரிக்கெட்டில் நடத்தப்படும் ஒருநாள் போட்டி, டி20 போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என இப்படி ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக ரசிகர் பட்டாளங்கள் இருந்தாலும். அனைத்து ரசிகர்களும் விரும்பி பார்க்கும் கிரிக்கெட் தொடர் தான் இந்த ஐபிஎல் தொடர். ஏன் கிரிக்கெட்டை பார்க்காத மக்களுக்கு கூட விரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் இந்தியாவில் நடத்தப்படும் இந்த ஐபிஎல் தொடரை உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட விரும்பி பார்க்கும் வண்ணம் வருடம் வருடம் நடத்தப்பட்டு வருகின்றது.
ஐபிஎல் தொடர்
அதேபோல் இந்த வருடம் மார்ச் 31ஆம் தேதி
நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கின்றது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இந்த தொடர் மிகவும் சுவாரஸ்யமாக செல்லப் போகிறது ஏனென்றால் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியிலும் பல அணிகளில் சிறந்த வீரர்கள் பலர் இடம்பெற்று இருப்பது ஒரு காரணம். இப்படி இந்த ஐபிஎல் தொடரில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மிகப் பெரிய அணிகள் என்று பார்த்தால் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். இதில் அதிக கோப்பைகளை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்திலும் இரண்டாவதாக அதிக கோப்பைகளை கைபற்றி இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
என்னதான் அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற இரண்டாவது மிகப்பெரிய அணியாக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் கூட ரசிகர்கள் உண்டு. அதற்கு காரணம் இந்த அணியின் கேப்டனாக இருக்கக்கூடிய மகேந்திர சிங் டோனி தான். இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத போட்டியாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு காரணம் இந்த இந்த ஐபிஎல் தொடர் தான் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்பதாலும் சென்னை அணியில் இருக்கும் மிகச்சிறந்த வீரர்களும் தான்.
மூன்று ஆல்ரவுன்டர் வீரர்கள்
எப்படியும் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி கோப்பையை தனதாக்கிக் கொள்ளும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் அதற்கேற்றார் போல் அணியின் வீரர்களும் மிகச்சிறந்த வீரர்களாக உள்ளனர். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சிஎஸ்கே அணியில் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்கள் உள்ளது தான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக உள்ளது.
நாம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கப் போகும் இந்தியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான பென்ஸ் ஸ்டாக் மற்றம் மொயின் அலி இவர்களால் தான் களமே சூடு பிடிக்கப் போகிறது.
ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜாவை பொறுத்தவரை கையில் அவர் பந்தை எடுத்தாலும் விக்கெட்டாக எடுப்பார் என்றும் பேட்டை கையில் எடுத்தாலும் ரன்களை அடித்து குவிப்பார் எனும் ரசிகர்கள் பெரும் நம்பிக்கையை ஜடேஜா மேல் வைத்திருக்கிறார்கள். அதற்கு சான்றாக ஐபிஎல் போட்டிகளில் ஜடேஜா விளையாடி உள்ள மொத்த ஆட்டத்திலும் சேர்த்து 2052 ரன்கள் எடுத்துள்ளார் அதேபோல் பந்து வீசிலும் 132 விக்கெட்டை எடுத்து தனது ஆட்டத்தை சிறப்பாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். அதனால் இந்த வருடம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ஜடேஜா பக்கபலமாக இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
மொயின் அலி
இங்கிலாந்தின் நட்சத்திர ஆட்டக்காரரான மொயின் அலி இவர் பேட்டிங் மட்டுமில்லாமல் பந்து வீற்றிலும் சிறந்து விளங்குபவர். இவர் 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது 357 ரன்கள் குவித்திருந்தார் அதேபோல் ஐபிஎல் தொடர்களில் 44 போட்டிகளில் பங்கேற்ற மொயின் அலி 910 ரன்கள் குவித்ததோடு மட்டுமில்லாமல் தன் சிறந்த பந்துவீச்சால் 24 விகெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். இவரும் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கோப்பையை தட்டுவதற்கு உறுதுணையாக இருப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
பென் ஸ்டோக்
பென் ஸ்டோக் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அணியின் தலைசிறந்த கேப்டனாக விளங்கி வருபவர் தான் இவர். பென் ஸ்டோக் பேட்டிங்கை பொறுத்த வரையில் முன்னாடி வரும் பந்துகளை சர்வ சாதாரணமாக மைதானத்திற்கு வெளியே பறக்க விடுபவர் தனது பேட்டிங் திறமையாலும் தனது பந்து வீசும் திறமையாளும் அவர் அணிக்கு பலமுறை வெற்றியை தேடி தந்துள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் 43 போட்டிகளில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 920 ரன்கள் குவித்து, பந்து வீச்சில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இப்படி இந்த மூன்று சிறந்த ஆல் ரவுண்டர்களையும் வைத்துக்கொண்டு சிஎஸ்கே அணி பலம் வாய்ந்தாணியாக உருவெடுத்துள்ளது.