ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷனை மிஞ்சி திலக் வர்மா புதிய சாதனை – விபரம் இதோ.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
இதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்று சூழ்நிலையில் யஷஸ்வி மற்றும் சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு பொறுமையாக நின்று விளையாடிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவருமே இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்தார்கள். ஏனென்றால் விக்கெட்டுகள் விழுந்த போது வந்த இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
மேலும் கடந்த 2 இந்தியா மிகவும் மோசமாக விளையாடிய நிலையில் திலக் வர்மா மட்டுமே அற்புதமாக விளையாடினார். சொல்லப்போனால் முதல் போட்டியில் 39 ரன்களும் இரண்டாவது போட்டியில் 51 ரன்களையும் எடுத்து இந்தியா அணிக்கு மோசமான தோல்வியை சந்திக்காமல் இருக்க போராடினர். அதே போலத்தான் 3வது போட்டியிலும் திலக் வர்மா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்களை விளாசியிருந்தார்.
இவர் இப்படி விளாசியதை பார்த்த ரசிகர்கள் பலரும் திலக் வர்மா கண்டிப்பாக உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தான் திலக் வர்மா சர்வதேச போட்டியில் அறிமுகமாகி வரும் 3 போட்டிகள் மட்டுமே ஆடிய நிலையில் திலக் வர்மா 503 புலிகளுடன் 46வது இடத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில், இஷான் கிஷான் , ஹர்டிக் பாண்டியா போன்ற டி20 பேட்டர்களை திலக் வர்மா முந்தியிருக்கிறார்.
அதோடு சர்வதேச டி20 தரவரிசையில் திலக் வர்மா இந்திய வீரக்ளின் தரவரிசையில் 5 வது இடத்தில இருக்கிறார். அதே நேரத்தில் சூரியகுமார் யாதவ் முதல் இடத்திலேஎ நீடிக்கிறார். ஆனால் பொதுவாக இந்திய அணியில் அசத்தும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் பெரிதும் ஆடாத நிலையில் விராட் கோலி 17 வது இடத்திலும், ரோஹித் சாரமான 34 வது இடத்திலும். கே எல் ராகுல் 33வது இடத்திலும் இருகின்றனர்.
மேலும் இந்த வருடம் டி20 போட்டிகளில் எதிர்பார்த்த அளவு விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷான் இருவரும் பின்தங்கி உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் ஹர்திக் பாண்டியா 53வது இடத்திலும், இஷான் கிஷான் 54 வது இடத்திலும் இறுகின்றனர். அதோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மட்டுமே திறமையாக செயல்பாட்டை சுப்மன கில் மற்ற போட்டிகளில் அசத்த சொதப்பியதன் காரணமாக 68 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் யாரும் பெரிதாக முன்னேறவில்லை. சொல்லப்போனால் சர்வதேச டி20 போட்டிகளுக்கான பட்டியலில் 10 இடங்களில் யாருமே இல்லை. மேலும் ஆர்ஸ்தீப் சிங் 17வது இடத்திலும், குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் எடுத்த விக்கெட் காரணமாக 33வது இடத்திற்கும், ஹர்திக் பாண்டியா 37வது இடத்திற்கும் வந்துள்ளார்.