வீடியோ : அணியில் தேர்வான பிறகு தனது பெற்றோரும், பயிற்சியாளரும் எப்படி உணர்ச்சிவசப்பட்டனர் என்பது குறித்து பேசிய திலக் வர்மா.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் இதில் மோசமான தோல்வியை தழுவியது இந்தியா. சுப்மன் கில் இஷான் கிஷான் தொடக்கத்திலேயே சொதப்ப பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டாமல் ஆட்டமிழந்தார். பி

By ·

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் இதில் மோசமான தோல்வியை தழுவியது இந்தியா. சுப்மன் கில் இஷான் கிஷான் தொடக்கத்திலேயே சொதப்ப பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டாமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மா கொஞ்சம் போட்டியை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

மற்ற பேட்ஸ்மேன்கள் ஒருபக்கம் ஆட்டமிழக்க பொறுமையாக நின்று விளையாடிய திலக் வர்மா 22 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். பொதுவாக தன்னுடை முதல் போட்டி என்றால் பொறுமையாக ஆடி பின்னர் ரன்களை சேர்ப்பார் மத்தியில் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆட ஆரம்பித்த திலக் வர்மா தன்னுடைய 2 பந்திலேயே சிக்ஸர் விளாசினார்.

மேலும் அதற்கு அடுத்த பந்தும் சிக்ஸர் விளையாசிய அவர் பந்துவீச்சாளரை குழப்பி 4வது பந்தை அடிக்காமல் விட்டுவிட்டார்.இதனால் தன்னால் அதிரடியாகவும் அதே சமயம் பொறுமையாகவும் ஆடமுடியும் என்பதை திலக் வர்மா இதன் மூலம் நிரூபித்துள்ளார். இந்நிலையில் தான் இஷான் கிஷனுடன் ஒரு பேட்டியில் பேசிய திலக் வர்மா தான் இந்திய டி20 அணியில் இடம்பிடித்தது குறித்தும், தன்னுடைய பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் எப்படி உணர்த்தார்கள் என்பது குறித்தும் பேசியுள்ளார் திலக் வர்மா.

அவர் கூறுகையில் “நான் இந்திய டி20 அணிக்கு தேர்வான குறித்து அறிவிப்பு வெளியான போது நான் துலீப் டிராபியில் விளையாடி கொண்டிருந்தேன். எனக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது என்று தெரிந்தவுடன் என்னுடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய பயிற்சியாளருக்கும் போன் செய்தேன். இதனை கேட்ட அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு விட்டனர், என்னுடைய பெற்றோர் கொஞ்சம் அழுது விட்டனர் என்று நினைக்கிறேன். என்னுடைய பயிற்சியாளரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.

அவர் எங்களுடைய மொத்த அகெடமிக்கும் இனிப்புகளை வாங்கி கொடுக்க நினைத்தார். மேலும் பேசிய திலக் வர்மா கூறுகையில் :வெஸ்ட் இண்டீஸ் அணியானது டி20 போட்டியில் மிகவும் பலமான அணி. எனவே நான் மிகவும் கணவனமாக எதுவும் புதிதாக செய்யாமல் எப்போதும் போல விளையாடினேன். என்னுடைய முதல் போட்டி என்பதினால் எனக்கு கொஞ்சம் பதர்ட்டம் இருந்தது. ஆனால் எனது 100 சதவிகிதத்தையும் கொடுக்க விரும்பினேன்.

நான் பயிற்சியின் போது ராகுல் சாரிடம் அதிகம் பேசியுள்ளேன். மேலும் எனது இயல்பான ஆட்டத்தை ஆட எனக்கு ஆதரவு கிடைத்தது. எனவே என்னால் பயமில்லாமல் விளையாட முடிந்தது என்றார் திலக் வர்மா. இந்நிலையில் இந்தியா இன்று இந்திய நேரப்படி 8 மணியளவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் விளையாட உள்ள நிலையில் போன ஆட்டத்தில் அதிரடி காட்டிய திலக் வர்மாவுக்கு இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அதாவது செய்யும் என்பதினால் இதனை அவர் எப்படி எதிர்கொள்ள இருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை