போட்டியின் போது திலக் வர்மா செய்த செயலால் குழம்பிய ரசிகர்கள் – விளக்கத்தை கூறியதால் நெகிழ்ச்சி.
ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடர்ந்து நேற்று பரபரப்பாக தொடங்கிய நிலையில் இந்திய கிரிக்கெட் சூழ்நிலையானது தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னரே 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடிப்பெற்றது வருகிறது. இதில்
ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடர்ந்து நேற்று பரபரப்பாக தொடங்கிய நிலையில் இந்திய கிரிக்கெட் சூழ்நிலையானது தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னரே 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடிப்பெற்றது வருகிறது. இதில் இந்திய அணி நேரடியாக காலிறுதி போட்டிக்கு சென்றது இந்நிலையில் ஆண்கள் கிரிக்கெட்டி பிரிவில் இந்திய அணியை ருதுராஜ் கெய்க்குவாட் வழிநடத்தினார்.
மேலும் இந்த அணியில் திலக் வர்மா, ரிங்கு சிங், போன்ற அதிரடி வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் முதலாக நேபாளம் அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியானது இன்று 6ஆம் தேதி நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 ல் வெள்ளி பதக்கத்தை இந்தியாவிற்கு உறுதி செய்தது.
உலகின் பெரும் நாடுகளில் ஒன்றான சீனாவின் ஹங்கொழு நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் தரமான பந்து வீச்சிற்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேசம் 20 ஓவரில் 96/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முதலிலேயே வெற்றியை உறுதி படுத்தியது இந்தியா. அதனை தொடர்ந்து 20 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே டவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
இருந்த போதிலும் இந்திய அணியின் தொடக்க வீரரரும் கேப்டனுமாகிய ருதுராஜ் கெய்க்குவாட் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து வங்கதேச பந்துவீச்சார்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 26 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 55 ரன்கள் விளாசினார். மறுபுறம் கேப்டன் ருதுராஜ் கைக்வாட் 26 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்த காரணத்தினால் இந்தியா 9.2 ஓவரிலேயே வெற்றி பெற்றது.
இதனையடுத்து இந்திய அணி நாளை இறுதி போட்டியில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது திலக் வர்மா தான் 50 ரன்களை எடுத்த பிறகு தன்னுடைய சட்டையை தூக்கி தன்னுடைய இடுப்பு பகுதியில் உள்ள டாடுவை காட்டினார். பின்னர் பின்னர் வானத்தை நோக்கி கும்பிட்டு வித்தியாசமாக தன்னுடைய அரை சதத்தை கொண்டாடினர். இதனால் ரசிகர்கள் குழப்பியிருந்த நேரத்தில் தான் அதற்கு பதிலளித்துள்ளார் திலக் வர்மா.
திலக் வர்மா கூறியது :
அவர் கூறுகையில் அந்த கொண்டாட்டம் என்னுடைய அம்மாவுக்காக சமர்ப்பித்தேன். ஏனென்றால் கடந்த சில போட்டிகளாக நான் சிறப்பாக செயல்படாமல் இருந்து வந்தேன். இப்போது அனைத்தும் சரியாகி விட்டதாக அப்போது கூறினேனே. மேலும் அந்த டடுவில் என்னுடைய சிறந்த நண்பர் சமைராவையும் இணைத்துள்ளேன். வரும் போட்டிகளில் நான் பவுலராக முன்னேறி ஆல் ரவுண்டராக வருவதற்கு விரும்புகிறேன். அதற்காக நான் அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பயிற்சி செய்தேன் என்றும் கூறினார் திலக் வர்மா.