நான் கனவிலும் கூட நினைத்து பார்க்கவில்லை.. ரோஹித் சர்மா எனக்கு நம்பிக்கை கொடுத்தார் – திலக் வர்மா உருக்கம்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இதனிடைய இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் இன்னும் இந்திய அணிக்கு திரும்பாமல் இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதை விட இந்தியாவிற்கு சமீப காலத்தில் நம்பர் 4வது இடத்தில் யார் விளையாடுவார் என்ற கேள்வி ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலான மாற்று வீரர் இல்லாததும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாததும் ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக 2011 உலகக்கோப்பை வெற்றியில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் சர்மா முதல் ஹர்திக் பாண்டியா வரை டாப் 6 பேட்ஸ்மேன்களும் வலது கை வீரர்களாக இருக்கின்றனர். இதனால் இடது கை வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற சில இளம் வீரர்களை இந்தியா போன்ற தயார் செய்து வருகிறது.
இந்நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட திலக் வர்மா தற்போது ஆசிய கோப்பைக்கான தொடரிலும் பங்குபெற்றுள்ளார். மேலும் இவர் அங்கு சரியாக விளையாடும் பட்சத்தில் உலக கோப்பையில் இடது கை பேட்ஸ்மேனாக களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாவது குறித்து பேசியுள்ள திலக் வர்மா நெகிழ்ச்சியான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, Suryakumar Yadav, Tilak Varma, KL Rahul, Ishan Kishan, Hardik Pandya (VC), Ravindra Jadeja, Shardul Thakur, Axar Patel, Kuldeep Yadav, Jasprit Bumrah, Mohd. Shami, Mohd. Siraj, Prasidh Krishna
— BCCI (@BCCI) August 21, 2023
Traveling stand-by…
தனக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து பேசுகையில் “எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற கனவு என்னுள் இருந்து வந்தது. ஏற்கனவே நான் உள்ளூர் கிரிக்கெட்டில் 50 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளதால் இம்முறை டி20 கிரிக்கெட்டை போன்று நிச்சயம் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவேன் என்றார்.
ரோஹித் பையா எப்போதும் என்னை ஆதரித்தார். நான் ஐபிஎல்லில் விளையாடும்போதும் அவர் என் அருகில் வருவார். ஐபிஎல் தொடக்கத்தில் நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன், அதனால் அவர் மட்டுமே என் அருகில் வந்து விளையாட்டைப் பற்றி பேசினார், உங்கள் விளையாட்டை எப்போதும் ரசியுங்கள், எப்போதும் விளையாட்டை ரசித்து விளையாடுங்கள் என்று கூறினார் பேசியிருந்தார் திலக் வர்மா.