இந்திய அணியில் தேர்வான திலக் வர்மா – உணர்ச்சி காரணமாக தருணத்தை பகிர்ந்து கொண்ட சிறுவயது பயிற்சியாளர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
அதற்கு காரணம் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக விளையாடவில்லை ஒருவ்ரை தவிர. அதாவது தன்னுடைய டி20 அறிமுகத்தை முதல் முறையாக பெற்ற திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே அசத்தியிருந்தார். அதற்கு பிறகு தனி ஆளாக திலக் வர்மா மட்டுமே அசத்தி கொண்டிருந்தார். அதோடு 50(39) பந்துகளில் அரை சதத்தையும் விளாசினார்.
சொல்லப்போனால் இவர் அடித்த ரன்களினால்தான் தான் இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 எடுத்தது என்றே சொல்லாம்.இந்த நிலையில் தான் திலக் வர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் சலாம் பயஷ் திலக் வர்மா குறித்தும், அவர் இந்திய அணியில் தேர்வான பிறகு தனக்கு போன் செய்த சம்பவம் குறித்தும் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
திலக் வர்மா குறித்து பேசுகையில் “திலக் வர்மா மிகவும் எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர், அவருடைய குடும்பம் ஆசிரியருக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொடுத்தது. நான் அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு பயிற்சியாளரும் தனது மாணவர் நாட்டிற்காக விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறார். அந்த வகையில் என்னுடைய ஆசை நிறைவேறியுள்ளது.
அவர் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்தில், அவர் என்னை வீடியோ காலில் அழைத்தார். அந்த நேரத்தில் நான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து கூப்பிட்டு கொண்டே இருந்தார் இறுதியாக நான் எனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவரது போனை எடுத்து பேசினேன். அப்போது அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதாக என்னிடம் கூறினார்.
அவர் “சார், எனக்கு இந்திய அணி வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறி அவர் மகிழ்ச்சியடைந்தார், நானும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் ஒரு பெரிய வீரராக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன். இதற்காக நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். நான் சச்சின் டெண்டுல்கரின் பெரிய விசிறி. அதுவே எனக்கு மிகப் பெரிய விஷயம். நீங்கள் மும்பை அணியில் இருப்பதால் சச்சின் டெண்டுல்கரிடம் இருட்னது உங்களால் முடிந்த அறிவைப் பெற முயற்சி செய்யுங்கள் என்றார் திலக் வர்மா சிறுவயது பயிற்சியாளர் சலாம் பயஷ்.