MI Vs RCB :தன்னுடைய மகனின் அதிரடி ஆட்டத்தை தூரத்தில் இருந்து ரசித்த திலக் வர்மா பெற்றோர்கள் | வைரல் வீடியோ.
பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அது சரியான முடிவாக இருந்தது என்று கூறலாம். ஏனென்றால் பெங்களூர் பந்துவீச்சாளர்கள் பவர்பிளேயில் 2
பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அது சரியான முடிவாக இருந்தது என்று கூறலாம். ஏனென்றால் பெங்களூர் பந்துவீச்சாளர்கள் பவர்பிளேயில் 20 ரன்களுக்குள் முதல் 3 மும்பை பேட்ஸ்மேன்களை வெளியேற்றி பெவிலியனுக்கு அனுப்பினார்கள். அது மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.
ஆனால் சரிகின்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்தாவது இடத்தில் வயது இளம் பேட்ஸ்மேன் திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்தார். மும்பை பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன் எடுக்க முடியாமல் திணறிய போது. அங்கு இந்த 20 வயது இளம் பேட்ஸ்மேன் திலக் வர்மா அற்புதமாக பேட்டிங் செய்து 82 ரன்களில் அரை சதம் விளாசினார். அதோடு தனி ஆளாக இருந்து மும்பை அணிக்கு 171 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன் போது அவரது பெற்றோரும் மைதானத்தில் இருந்தனர். திலகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவனது பெற்றோர் கைதட்டிக்கொண்டிருந்தனர். இவ்வளவு பெரிய மேடையில் தனது 20 வயது மகன் இவ்வளவு பொறுப்பான இன்னிங்ஸை ஆடுவதைப் பார்த்து, அவனுடைய தலையும் பெருமிதத்தில் உயர்ந்தது. திலக் வர்மாவின் அற்புதமான அரை சதம் இன்னிங்ஸின் போது, அவரது பெற்றோரின் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டியின் மூலம் திலக் வர்மா நல்ல ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுத்தார். அவருடைய சிக்ஸர் மிகவும் சிறப்பாக இருந்தது. அதுவும் கடைசி பந்தில் திலக் வர்மாவின் ஹெலிகாப்டர் ஷாட் எம்எஸ் தோனியை நியாபகப்படுத்தியது. அந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. ஏனென்றால் எம்.எஸ்.தோனியும் கடைசி பந்தில் இதேபோன்ற ஷாட்களை ஆடித்தான் இன்னிங்ஸை முடிப்பார்.
Happiness says it all!
— Mumbai Indians (@mipaltan) April 2, 2023
Tilak’s family loud and proud 💙#OneFamily #RCBvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @TilakV9 pic.twitter.com/CquP5RtpP5
ஆனால் பின்னர் தங்களுடைய சொந்த மண்ணில் களமிறங்கிய ஆர்சிபி மிகப்பிரமாத்மாக விளையாடியது. ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெசீ மற்றும் விராட் கோலி இருவரும் கைகோர்த்து பிரமாதமாக ஆடினார்கள். விராட் கோலி 49 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார். அதோடு டு பிளெசீ 43 பந்துகளில் 73 ரன்கள் அடித்து எளிமையாக இலக்கை தொட்டு வெற்றிபெற்றனர். இந்நிலையில் எப்போதும் போல இப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்சியின் தொடக்க ஆட்டத்தில் தோற்று விட்டது.