தோனியின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்..காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் பழமையான ஒரு கிரிக்கெட் போட்டி என்றால் அது பூச்சு பாபு கிறிக்கெட் போட்டி தான். இது தென்னக கிரிக்கெட்டின் தந்தை என அளிக்கப்படும் புச்சு பாபுவின் நினைவாக இந்த போட்டியானது கடந்த 1909 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந

By ·

இந்தியாவில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் பழமையான ஒரு கிரிக்கெட் போட்டி என்றால் அது பூச்சு பாபு கிறிக்கெட் போட்டி தான். இது தென்னக கிரிக்கெட்டின் தந்தை என அளிக்கப்படும் புச்சு பாபுவின் நினைவாக இந்த போட்டியானது கடந்த 1909 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த வரலாற்று சிறப்பவுமிக்க போட்டியானது கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ் நாடு பீரிமியர் லீக் காரணமாக நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தான் தான் இந்த போட்டி மீண்டும் இந்த வருடம் நடக்க இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் TNPL முடிந்த நிலையில் தமிழ்நாட்டு வீரர்களை ரஞ்சி டிராபிக்கு தயார் படுத்த இந்த புச்சி பாபு கிரிக்கெட் போட்டியை நடத்த இறுகின்றனர். இந்த போட்டியில் 12 அணிகள் இந்த வருடம் கலந்து கொள்வதாக சொல்லபடுகிறது. மேலும் இந்த போட்டியானது சென்னை நகரை தாண்டி கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற நகரங்களில் நடக்க இருக்கிறது.

மேலும் சமீப காலத்தில் ரஞ்சி டிராபியில் விளையாடும் தமிழ்நாடு அணி மிகவும் மோசமாக செயல்படுவதினால் இந்த போட்டியில் பேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மைத்தனத்தில் கீரன் டாப் அமைக்கப்பட இருப்பதாகவும், இதன் மூலம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த போட்டியில் தமிழ்நாட்டு சங்கம் சார்பில் இரண்டு அணிகளும், கேரளாவில் இருந்து ஒரு அணியும், மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து சில அணிகளும் கலந்து கொள்ள இறுகின்ற்றனர்.

மேலும் இந்த போட்டிக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது 2 1/2 கோடி செலவு செய்ய இருப்பதாகவும், 3 லட்சம் வெற்றியாளருக்கு பரிசாக கொடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இப்படிபட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாகிய தோனி தமிழ்நட்டு கிரிக்கெட் சங்கத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். அதாவது இந்த போட்டியில் ஜார்கண்ட் அணியையும் சேர்த்தது கொள்ளும் படி கோரிக்கை வைத்தார். ஆனால் அது நிராகரிப்பிக்கப்பட்டுளது.

இதுக்கு விளக்கம் கூறிய செயலாளர் பழனி கூறுகையில் “வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 8 அணிகளை எடுத்த நிலையில் கோரிக்கையின் பெயரில் தற்போது 12 அணிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் எங்களினால் மேலும் அணிகளை சேர்த்து கொள்ள முடியவில்லை. அதோடு பல்வேறு மாநிலங்களில் உள்ள அணிகள் தொடர்ந்து கோரிக்கை கொடுத்து கொண்டே இருப்பதினால் அவற்றினால் பரிசோதிப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும், அதனால் ஜார்கண்ட் அணியை இந்த முறை சேர்த்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை