எனது போராட்டங்களை எங்க அம்மா பார்த்துட்டு இருந்தாங்க… இன்று எங்க அம்மா என்னோட பொட்டிய பார்த்தாங்க – ரியான் பராக் உருக்கமாக பேச்சு.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போதுவரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்க்கு முன்னதாக லக்னோ அணியை வெற்றி பெற்றும் டெல்லி அணி இதற்கு முன்பு பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியும் இன்றை

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போதுவரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்க்கு முன்னதாக லக்னோ அணியை வெற்றி பெற்றும் டெல்லி அணி இதற்கு முன்பு பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியும் இன்றைய போட்டியில் விளையாடியது.இதில் டெல்லி அணி வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்வோமா என்ற கேள்வி டெல்லி அணியின் ரசிகர்களிடையே பெரும்பான்மையாக இருந்தது ஆனால்அது நடக்கவில்லை.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் வீரர்கள் தொடக்கத்தில் சற்று நின்று நிதானமாக விளையாடி பவர்ப்ளே ஓவரில் ரன்களை குவிக்க தவறிவிட்டனர். ஆனால் அதன் பின்பு வந்த ரியான் பராக் மற்றும் ஜூரேல் இணைந்து ராஜஸ்தான் அணிக்கு பெரிய இலக்கு எட்ட உதவி செய்தனர். அதில் அதிகபட்சமாக ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் அடித்திருந்தார் அதில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் அடங்கும். அதற்கு அடுத்த இடத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

அதில் அவர் மூன்று சிக்சர்களை அவர் அடித்திருந்தார். அதன் பின்பு தனது அதிரடியாக ஆட்டத்தால் ஜூரேல் 12 பந்துகளில் 20 ரன்களை அடித்து இருந்தார். அதில் அவர் மூன்று பவுண்டரிகளை அடித்திருந்தார். எனவே ராஜஸ்தான் ராயல் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறி வந்தாலும் அதன் பின் பராக் மற்றும் ஜூரேல் சிறப்பாக செயல்பட்டதால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்கள் குவித்து இருந்தது.

அதன் பின் பேட்டிங் செய்த டெல்லி அணியும் மிடில் ஆர்டரில் சற்று சொதப்பி இருந்தாலும் அதன் பின் வந்த வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். இருப்பினும் ராஜஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது.ஆட்டநாயகன் ரியான் பராக் கூறுகையில், உணர்ச்சிகள் தீர்ந்துவிட்டன, அம்மாவும் இங்கே இருக்கிறார். அவர் போராட்டங்களைப் பார்த்தார், இது சிறப்பாக உணர்கிறது.

எனது திறன் என்னவென்று எனக்குத் தெரியும், நான் அதை மாற்ற அனுமதிக்க மாட்டேன் – நான் செயல்படுகிறேனா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல். நிறைய உள்நாட்டு சீசனில் நான் அதிக ரன்கள் எடுத்தேன். முதல் நான்கு இடங்களில் உள்ள ஒருவர் அதை ஆழமாக எடுக்க வேண்டும். முதல் போட்டியில் சஞ்சு பையா செய்தார், இன்று நான் அதை செய்தேன். நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. நான் படுக்கையில் இருந்தேன் கடந்த மூன்று நாட்களில், இன்று என்னால் சமாளிக்க முடிந்தது என்று அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை