அவருக்கு பதிலாக இந்த இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் – டாம் முடி விமர்சனம்

இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்ட்டுள்ளது. அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் இந்த அணியில் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்

By ·

இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்ட்டுள்ளது. அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் இந்த அணியில் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் மீண்டும் நேரடியாகவே தேர்வாகியுள்ளதும் சஞ்சு சாம்சன் வெறும் பேக்-அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் ரசிகர்களை ஏமாற்றமைந்தர்கள்.

அதே போல இத்தொடரில் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா நேரடியாக தேர்வாகியுள்ளார். அதை விட டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக ஒருநாள் போட்டிகளில் சுமாராக செயல்பட்டுள்ள சூரியகுமார் யாதவ் நேரடியாக தேர்வாகியுள்ளாற். இப்படிப்பட்ட நிலையில் சூரிய குமார் யாதவ் தேர்வு குறித்து பேசியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி

அவர் இது குறித்து பேசுகையில் இந்த அணியில் அதிர்ஷ்டத்தால் தேர்வான வீரர் என்றால் அது சூரியகுமார் யாதவ் என்று நினைக்கிறேன். அவர் விளையாடுவதை நாம் அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய அற்புதமான வீரர் என்பதை நான் அறிவேன். ஆனால் இன்னும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படவில்லை. குறிப்பாக 20 போட்டிகளுக்கு மேல் விளையாடியும் இன்னும் அவர் ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாக செயல்படும் வழியை கண்டறியவில்லை என்று நினைக்கிறேன்.

அது போன்ற சூழ்நிலையில் என்னை பொறுத்த வரை உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்வேன். எனவே நானாக இருந்திருந்தால் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரரை தேர்வு செய்திருப்பேன். அல்லது அந்த இடத்தை ஒரு மணிக்கட்டு ஸ்பின்னருக்கு கொடுத்திருக்கலாம். அது யார் என்று (சஹால்) உங்களுக்கே தெரியும். டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒருநாள் போட்டிகள் மிகவும் வித்தியாசமானது.

அதில் இன்னும் வெற்றிகரமாக செயல்படுவதற்கான வழியை அவர் உடைக்கவில்லை. மேலும் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்படாத அவர் இந்த கடைசி நிமிடத்தில் சாதித்து விடுவார் என்று எனக்கு தோன்றவில்லை என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல ஒருநாள் கிரிக்கெட்டில் 24 போட்டிகளில் தொடர் வாய்ப்பை பெற்ற சூரியகுமார் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடர் உட்பட டாப் முதல் மிடில் ஆர்டர் வரை பல இடங்களில் வாய்ப்பு கொடுத்தும் எதிலுமே வெற்றிகரமாக செயல்படவில்லை. எனவே அவரது இடத்தை ஜெய்ஸ்வால் அல்லது சஹால் போன்றவர்களை தேர்வு செய்து பயன்படுத்திருக்கலாம் என்று டாம் மூடி விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை