முக்கிய போட்டியில் சொதப்பிய TSK – நாளை மும்பை இந்தியன்ஸ் நியூயார் அணியை எதிர்கொள்ளும் சூப்பர் கிங்ஸ்.

கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும்

By ·

கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து வருகிறது.

இந்த போட்டியானது சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. 6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் மட்டுமே நடக்க இருக்கிறது. இந்த ஆறு அணிகளில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளும் மீதம் 2 அணிகளை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களும் வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது சியாட்டில் ஓர்காஸ் அணியை இன்று குவாலிபயர் 1 போட்டியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணியானது பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆவது அவர்களுக்கு பிக்கள் பிரச்னையாக மாறும் என்று தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் தொடக்க வீரர்களாக களமிறங்கியஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கான்வே எப்போதும் போல அதிரடி காட்ட கேப்டன் டூ ப்ளசிஸ் வரும் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதுவே சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு தடங்கலாக இருந்தது, அதற்கு பிறகு கான்வேவும் 24(19) ரன்களுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு பின்னர் வந்த மிலந்த் குமார் 5(10) ரன்களுக்கு ஆட்டமிழக்க பொறுமையாக அடிவந்த கோடி செட்டியும் 24(21) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான அழுத்தம் கூடியது.பின்னர் வந்த சான்ட்னர், டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர வீரர்கள் எதுவும் பெரிதாக அடிக்காத நிலையில் சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சியாட்டில் ஓர்காஸ் அணியின் தொடக்க வீரரான நியூமன் அன்வர் 2(6) ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஜெயசூர்யாவுடன் கூட்டணி அமைத்து அற்புதமாக விளையாடிய அற்புதமாக விளையாடிய டீ காக் அரை சதம் விளாசினார். இறுதியில் 1 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் சியாட்டில் ஓர்காஸ் அணியானது 15.1 ஓவர்களில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அத்புதமாக விளையாடிய குய்ட்டன் டீ காக் 88(50) ரன்களும் ஜெயசூரிய 31(34) ரன்களும் விளாசினார்கள். இதனால் இவர்கள் நேரசியாக பைனல் போட்டிக்கு முன்னேறினார்கள். மறுபுறம் தோல்வியை தழுவிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது நாளை குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை எதிர்கொள்ள இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை