“பழைய பிராவோவை பார்த்த ரசிகர்கள்” கடைசி ஓவரில் 27 ரன்கள் இலக்கு.. போராடி தோற்றுப்போன டெக்சாஸ் சூப்பர் கின்ஸ்
டி20 கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்
டி20 கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து வருகிறது.
இந்த போட்டியானது சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. 6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் மட்டுமே நடக்க இருக்கிறது. இந்த ஆறு அணிகளில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளும் மீதம் 2 அணிகளை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களும் வாங்கியுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் இன்று காலை இந்திய நேரப்படி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் வாஷிங்டன் பிரீடம் அணிகளுக்கு இடையேயான போட்டியானது நடைபெற்றது.
இந்த போட்டியின் முதலில் டாஸ் வென்ற வாஷிங்டன் பிரீடம் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மேத்யூ ஷார்ட் மற்றும் அன்ரிஸ் கோஸ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள். முதல் ஓவரிலேயே 15 ரன்கள் அடிக்க இந்த இணையானது 3 ஓவர்களில் 30 ரன்களை கடந்தது. குறிப்பிடதக்க வகையில் சிறப்பாக விளையாடிய மேத்யூ ஷார்ட்ஸ் 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிக்ளுடன் 80 ரன்களை குவித்தார்.
That Six off Nortje.. Marvelous!!!#TSKvsWAF #MLCpic.twitter.com/RSLUJy1t59
— Ragav Cricket (@ragav__cricket) July 17, 2023
இவரை தவிர அவர்களின் அணியில் யாரும் பெரிதாக ரன்களை அடிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் பிரீடம் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை விளாசியது. இதற்கு பிறகு களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய இலக்கு காத்து கொண்டிருக்க தொடக்க ஆட்டக்காரர் கான்வே டக் அவுட்டாக்கினார். இவருக்கு பிறகு வந்த கேப்டன் டுப்ளெஸிஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க டெக்சாஸ் அணி ரன் எடுக்க தடுமாறியது.
கடைசி வரையில் போராடிய பிராவோ :
இதற்கு பிறகு வந்த டேவிட் மில்லர், மிலிந்த், மிலிண்ட் குமார் உள்ளிட்டோர் சொற்பப் ரன்களில் ஆட்டமிக்க மிட்செல் சான்டனர் 22 விளாசினார். மேலும் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபகம் கம்பீரமாக நின்று விளையாடிய பிராவோ அரை சதம் விளாசினார். அதோடு இந்த போட்டியை பார்க்கும் போது பழைய பிராவோ ஆடுவதை போல இருந்தது. அப்படி நாலாபுறமும் சிக்ஸர்களை விளாசினார்.
@DJBravo47 has set the @MLCricket alight! What a #champion!
— Just Kricket (@JustKricket) July 17, 2023
Totally entertained! #TSKvsWAF pic.twitter.com/nKF81sb7AQ
இந்நிலையில் கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் போராடிய பிராவோ 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் டெக்சாஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தற்போது புள்ளி பட்டியலில் டெக்சாஸ் அணியானது 3 வது இடத்தில் இருக்கிறது, மேலும் நாளை டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியுடன் விளையாட இருக்கிறது.