அடுத்தடுத்து இரண்டு சதங்கள். மாறதா புஷ்பா படத்தின் செய்கை. மாஸ் காட்டும் டேவிட் வார்னர்.

சதம் அடித்த பின் புஷ்பா படத்தில் வரும் காட்சி போல மைதானத்தில் அது போல் செய்து ரசிகர்களை உற்சாகப் படுத்தினார். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்த

By ·

சதம் அடித்த பின் புஷ்பா படத்தில் வரும் காட்சி போல மைதானத்தில் அது போல் செய்து ரசிகர்களை உற்சாகப் படுத்தினார். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடத்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்தில் இருந்து ரன்களை குவித்து வந்தது. இருப்பினும் ஆரம்பத்திலேயே மிச்சல் மார்ச் 9 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றி வெளியேறினார். அதன் பின்பு சிறப்பாக விளையாடி இருந்த டேவிட் வார்னர் தனது மற்றுமொரு சதத்தை கடந்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்மித் ஆரியன் வீசிய பந்தில் 71 ரன்கள் இருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின் மர்னஸ் 62 ரன்களிலும் ஜோஷ் இங்கிலீஷ் 14 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். அதன் பின் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் 1௦4 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறினார். 11 பவுண்டரிகளும் மற்றும் ஆறு சிக்ஸர்களை அடித்து அவருடைய சதத்தை கடந்தார். உலகக் கோப்பை போட்டியில் தன்னுடைய 6 சதத்தையும் அவர் பூர்த்தி செய்து இருந்தார். அதன் பின் அவர் புஷ்பா திரைப்படத்தில் வரும் வசனத்திற்கு ஏற்ப செய்கையும் காண்பித்தார்.

“புஷ்பா னா flowerனு நினைச்சிங்களா fire டா” அந்த வசனத்திற்கு ஏற்ப அந்த செய்கையும் செய்து காண்பித்து ரசிகர்களை உற்சாகப் படுத்தினார். அவர் இதே போன்று கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 163 ரன்களை குவித்து குவித்திருந்தார். அதில் 14 பவுண்டரிக்கு 9 சிக்சர்களையும் அடித்து இருந்தார். அந்த போட்டியில் கூட அவர் சதத்தை கடந்த பின்பு புஷ்பா படத்தில் வரும் வசனத்திற்கு ஏற்ப செய்கையும் செய்து காத்திருந்தார். தற்போது மேக்ஸ்வெல் அதிவேக சதத்தை அடித்து ஒரு புதிய வரலாற்றை படைத்தது இருகின்றார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை