இது ஒரு நல்ல போட்டியாக இருந்தது. எங்கள் வீரர்களை பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன் , ஆனால் அதைசெய்து இருக்க கூடாது – கேப்டன் உதய் சஹாரன்.
இந்திய அணியின் இளம் படை u19 உலகக்கோப்பையில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் இருந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு,
இந்திய அணியின் இளம் படை u19 உலகக்கோப்பையில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் இருந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கேப்டன் உதய் சஹாரன், “சில மோசமான ஷாட்கள்” மற்றும் பேட்டர்கள் ஆடுகளத்தில் நேரத்தைச் செலவிடத் தவறியதைத் அவர் சுட்டி காட்டி இருந்தார்.
இந்த இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது. ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி இருந்தாலும் அதன் பின் தங்களது ஆட்டத்தை காட்டி சிறப்பாக விளையாடி வந்தனர். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை குவித்து இருந்து. அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன் கள் தொடர்ந்து நிலையாக இருக்காமல் வந்த வேகத்திலே சென்றது. நான்கு வீரர்களை தவிற மற்ற எந்த ஒரு இந்திய வீரரும் இரண்டிலக்க ரன்களையும் அடிக்கவில்லை. கேப்டன் உதய் சஹாரன் 8 ரன்களை மட்டும் தான் அடித்து இருந்தார். இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் கோப்பையை நழுவ விடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் கூறுகையில்,
இது ஒரு நல்ல போட்டியாக இருந்தது. எங்கள் வீரர்களை பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன், அவர்கள் அனைவரும் நன்றாக விளையாடினார்கள். அவர்கள் அனைவரும் ஆரம்பத்திலிருந்தே சிறந்த சண்டை மனப்பான்மையை வெளிப்படுத்தினர், அவர்களைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டார். [ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்வதில்] நாங்கள் சில மோசமான ஷாட்களை விளையாடினோம், கிரீஸில் அதிக நேரம் செலவிட முடியவில்லை.
நாங்கள் தயார் செய்தோம், ஆனால் செயல்படுத்த முடியவில்லை. [போட்டியில் இருந்து கற்றல்] தொடக்கத்தில் இருந்து இப்போது வரை நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சியாளர்களிடம் இருந்து விளையாட்டுகள் வரை நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் கூறினார். கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலககோப்பையில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் கோப்பையை நழுவவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.