ஒப்பனா சொல்ற.. ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர் சச்சின் கிடையாது இவர் தான் – உஸ்மான் கவாஜா ஆச்சரிய கருத்து.

உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில

By ·

உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் இன்னும் சில காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் ஆஸ்திரேலிய அணியின் வீரரான உஸ்மான் கவாஜா கிரிக்கெட்டில் சிறந்த வீரர் சச்சின் இல்லை என்று கூறியிருக்கிறார்.

அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் “ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி சிறந்தவர் என்று நான் கூறப் போகிறேன். நீங்கள் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் எத்தனை சதங்களைப் அவர் இன்னும் குறைவான ஆட்டங்களில் விளையாடி பெற்றுள்ளார். சச்சின் நான் வளர்ந்த காலத்துக்கான அளவுகோல், ஆனால் கோலி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதனை யாரும் தற்போது விளையாட்டில் செய்ததில்லை.

அவர் தன்னைச் சுற்றியுள்ள வீரர்களை மேம்படுத்துகிறார். எல்லோரும் அவருடன் விளையாட விரும்புகிறார்கள்; அவர் உயர் தரத்தை காட்டுகிறார். அவர் அணிக்கு வந்ததும், அவர் ஒரு பாரம்பரியத்தை விட்டு செல்ல விரும்பினார். மேலும் மூன்று விதமான ஆட்டத்திலும் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்திய அணியை உலக கோப்பையில் அவர் பிரதிநிதிப்படுத்துகிறார். அவரிடம் எனக்கு பிடித்தது அவர் பேட் செய்யும்போது ஆட்டத்தின் வேகத்தை எப்படிக் கட்டுப்படுத்துகிறார் என்பதுதான்.

வித்தியாசமான கியர்களைப் விளையாட்டை கட்டுப்படுத்த கூடிய ஒருவர். அவர் உள்ளே சென்று உங்களிடமிருந்து ஆட்டத்தை எடுத்துவிடவும் முடியும் அதே நேரத்தில் தேவைப்படும்போது பொறுமையாக ஆடி ஆட்டத்தை நழுவ விடாமலும் செய்ய முடியும். அவர் விளையாட்டின் முழு வேகத்தையும் கட்டுப்படுத்துகிறார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் நாங்கள் பார்த்த ரன் சேசர்களில் அவர் மிகச் சிறந்தவர். விராட் மீது எனக்குப் பிடித்த விஷயம் அவரது நிலைத்தன்மை. இவ்வளவு காலமாக அவர் மிகவும் சீரான ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கிறார் என்று நான் நம்புவதற்குக் காரணம் அவர் மிகச்சிறந்தவர். மேலும் இரண்டு மற்றும் நான்கு ரன்களை அடிப்பதில் நான் பார்த்த மிகச்சிறந்த வீரர் விராட் கோலி அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடிக்க மாட்டார் என்று புகழ்ந்து பேசியுள்ளார் உஸ்மான் கவாஜா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை