ஹர்திக் பாண்டியா விஷயத்தில் இந்தியா பொறுமை காக்க வேண்டும்..ஏனென்றால் – ராபின் உத்தப்பா விளக்கம்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு காரணம் ஹர்திக் பாண்டியாதான் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் முதற்கொண்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிச்சியாளர் டிராவிட் செய்த தவறி சுட்டிக்காட்டி பலரும் அவருக்கு கேப்டன் பதவி செட்ஆகவில்லை என்றும் விமர்சிக்கின்றனர்.

மேலும் இன்று நக்கும் மூன்றவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியாது 2016 ஆண்டிற்கு பிறகு இந்தியாவை வீழ்த்தும், அதே நேரத்தில் 0-3 என்ற கணக்கில் வெற்றியும் பெரும். ஒருவேளை வரும் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது என்றால் ஹர்திக் பாண்டியா மீது கடுமையான குற்றசாட்டிகள் வைக்கப்படும். இப்படிப்பட்ட நிலையில் தான் ஹர்திக் விஷயத்தில் பொறுமையாக இருக்கும் படி கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.

ராபின் உத்தப்பா பேட்டி :

அவர் கூறுகையில் “என்னை பொறுத்தவரையில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை மிகவும் திறமையாக வழிநடத்துகிறார் சில தவறுகள் உள்பட. குறிப்பாக யுஸ்வேந்திர சாஹல் ஒரே ஓவரில் விக்கெட் எடுத்த பின்னரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது தவறான கணிப்பு என்றே சொல்லலாம். மேலும் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சிறப்பாகவே விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் அற்புதமாக இருக்கிறார்.

அவர் தான் ஒரு பந்துவீச்சாளர் என்று பொறுப்பை எடுத்து கொண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுத்தார். அதன் மூலம் நல்ல தொடக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் கிடைத்தது. அப்படிச் சொல்லிவிட்டு. நான் அப்படி சொல்லியிருந்தாலும் அவரைப் போன்ற ஒரு வீரனுடன் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவர் இதுவரை ஐபிஎல்-ல் மட்டுமே தலைமை தாங்கினார், சர்வதேச போட்டி அனுபவம் குறைவு.

எனவே அணியை சிறப்பாக வழி நடத்த சிறிது நேரம் ஆகும், மேலும் அவர் ஒரு தலைவராக வந்து பிரகாசிக்க சிறிது பொறுமையைக் கடைப்பிடிப்பது அணி நிர்வாகத்திற்கும், இந்திய அணியின் ஆதரவாளர்களான நமக்கும் புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார் ராபின் உத்தப்பா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை